Saturday, September 5, 2009

தல, தல ரசிகர்களுக்கு...

விஜய் வில்லுல நடிச்சார் , அஜித் போட்டி போட்டு ஏகன்ல நடிச்சார். அதாவது அவர் தம்பி டைரக்ட் பண்ற படத்துல நடிச்சா, இவர் அண்ணன் டைரக்ட் பண்ற படத்துல நடிப்பாராம். ரெண்டுமே கேவலமா இருந்தது அடுத்த விஷயம்.
  • இப்படி ரெண்டு பேருமே போட்டி போட்டு மக்களை டார்ச்சர் தான் பண்றாங்க. அப்படி இருக்கும் போது நீங்க இப்படி டார்ச்சர் கொடுக்கறீங்களே. உங்களுக்கே இது நியாயமா இருக்கா?
  • நீங்க எல்லாம் கொடுக்கற அலப்பறைல தான் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பஞ்ச டயலாக் சாரி சாரி.. பஞ்ச் டயலாக் பேசி டார்ச்சர் பண்றாங்க. ஒருத்தர் தெலுகு படத்தை ரீமேக் பண்ணா இன்னொருத்தர் போட்டி போட்டு தமிழ் படத்தையே ரீமேக் பண்றார். இந்த கொடுமைக்கு நீங்க இவ்வளவு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்கீங்க.
  • ஒழுங்கா பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும்னு நடிச்சிட்டு இருந்த விஜயையும், வாலி, அமர்க்களம், முகவரினு நடிச்சிட்டு இருந்த அஜித்தையும் ஏத்திவிட்டு ஏத்திவிட்டு உருப்படியில்லாம பண்ணிட்டீங்க. இப்பவாவது நீங்க அடங்கினா தானா அவுங்களும் நல்ல படத்துல நடிக்க ஆரம்பிப்பாங்க. அது தான் எல்லார் ஆசையும்.

No comments: