Tuesday, September 8, 2009

ஆஸ்காரில் தமிழர்கள்-காமெடி

படித்து சுவைத்த ஒன்று
அமெரிக்காவில் ஆஸ்கார் அரங்கத்துக்கு வெளியே நம்ம தமிழ் நிருபர் வந்த நட்சத்திரங்களிடம் பேட்டி எடுப்பதற்காக காத்துக்கொண்டிருந்தார்..
முதலில் நிக்காம சென்ற நம்ம சூப்பர் ஸ்டார்... நிருபர் "சார்.. சார்.. சார் கொஞ்சம் நில்லுங்க" "நீங்க யாரு இந்த ஊரு விநியோகிஸ்தரா?. உங்களுக்கு எவ்ளோ நஷ்டம்? நாளைக்கே ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து காச வாங்கிக்குங்க"
  • "இல்ல சார் நான் நிருபர் சார். அதுவுமில்லாத நாங்க தான் உங்கல வச்சு காசு நிறைய காசு சம்பாதிக்கிறோம். நியாயமா பார்த்தா நாங்க தான் உங்களுக்கு "ராயல்டி"யே கொடுக்கணும். மேட்டர் அதில்லை சார். உங்க எந்த படம் போட்டில இருக்கு?"
(இதை படிக்கும் போது ரஜினி ஸ்டைலில் வாயை கோனையாக வைத்து படிக்கலாம், தவறில்லை) "ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா எனக்கு போட்டியா. கண்ணா எனக்கு போட்டின்னு சொன்னாக்கா இங்க ஆரும் கிடையாது. ஆனா...ஜே.கே ரித்தீஷ் படம் போட்டில இருக்குன்னு சொன்னாங்க. அந்த படம் மட்டும் ஜெயிச்சாக்கா இனி தமிழ்நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது"
  • "அட போங்க சார். "நீங்க இப்டி சொன்னாக்கா அவுங்க ஜெயிச்சுருவாங்க"ன்னு தெரியாதா?"ன்னு அவர் ஸ்டைலியே நிருபர் கலாய்க்க தலைவர் டென்ஷனாகி போகிறார்.
அடுத்து உலகநாயகன் நிருபர்"சார் உங்க படம் நிறைய போட்டில இருக்கும்ன்னு தெரியும் அதனால இந்த 'ஆஸ்காரில் தமிழர்கள்' மேட்டரில் எப்படி பீல் பண்றீங்க"
  • உலக நாயகன் கரகரத்த குரலில் "உண்மையில் சொல்ல போனால் இந்த ஆஸ்கார் என்பது ஒன்றும் குதிரைக்கு கொம்பு விஷயமில்லையென்றாலும் இன்னும் எட்டா கனியாக இருப்பதால் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லையென்றால் நாம் ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துரைக்காமல் விடுவதனால் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று காரணம் கூறுபவர்களுக்கு நமது கையினால் விருது வழங்கும் நாள் வரும் என்பது தான்" என்று முடிக்க,
நிருபர் பொறுமையிலந்து "சார் உங்க படம் மாதிரியே ஒன்னும் புரியல, ஆளை விடுங்க" என்று கூறி எஸ்கேப் ஆகி விடுகிறார். அடுத்து கேப்டன்...
  • "டேய் இந்த விருதுல 356 படங்கள் போட்டியிடுது, அதுல 254 ஆங்கில படம், 17 ஜெர்மானிய படம், 21 ஸ்பானிஷ் படம், 23 சைனீஸ் படம், 18 ஈரானிய படம், 25 இந்திய படம் அதுல 15 தமிள் (எழுத்து பிழையல்ல) படம்.ஆங்ங்ங்ங்..."
நிருபர்"கேப்டன் உங்க கணக்கு(ம்) உதைக்குது. எல்லாம் கூட்டினா 358 வருது" "டேய் உன்ன யாருடா கூட்ட சொன்னது நான் சொல்றத மட்டும் கேளு" "என் படம் தனியா போட்டியுடும் எவனோடையும் கூட்டணி கிடையாது"ன்னு எலக்க்ஷன் ரேஞ்சுக்கு பேசிக் கொண்டே உள்ளே சென்றார்.
  • அப்போது ரோடை கிராஸ் செய்து விஷால் வர ஒரு கார் அவரை நோக்கி வேகமாக வர நிருபர் "விஷால் காரு...."ன்னு கத்த மயிரிழையில் தப்பினார். ஆனால் நிருபர் " விஷால் காரு(garu)"ன்னு கத்தினதாய் விஷால் தவறாக புரிந்து "மீரு தெலுங்கா"ன்னு தசாவதாரம் கமல் ஸ்டைலில் கேக்க, நிருபர் டென்ஷனாகி "அட போங்க சார் உங்கள எச்சரிக்கை செய்தேன்"ன்னு சொல்ல உடனே முஞ்சியை 'சல்யூட்' ஸ்டைலில் விறைப்பாக்கி(ன மாதிரி நினைத்துக்) கொண்டு உள்ளே சென்றார்.
பின்னாலயே வந்த அவர் டைரக்டர் ஆர்.டி.ராஜசேகர்யை நிருபர் மடக்க அவரும் "மீருக்கு ஏமி காவாலி"ன்னு கேக்க, நிருபர் "சார் நான் தமிழ் நிருபர் என்ன அடையாளம் தெரியல" "நாக்கு எல்லாம் மறந்துலு போச்சு, நூவு, தமிலு, நேனு இன்டி எல்லாம்"ன்னு பிதற்ற நிருபர் கொஞ்சம் பயத்தோடு ஜகா வாங்குகிறார்.
  • அதற்குள் வாசலில் ஒரு சப்தம் கேட்க, பார்த்தால் நம்ம தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம ராமநாராயணன் உள்ளே விட மாட்டேன் என்று கூறிய செக்யூரிட்டியை பாம்பை காட்டி பயமுறுத்தி உள்ளே செல்ல முயன்றார். நிருபரை பார்த்ததும் சிரித்துக்கொண்டே அவரிடம் வந்தார்.
நிருபர் "என்ன சார் இரும்பு அடிக்கிற இடத்தில 'ஈ' க்கு என்ன வேலை?"ன்னு கேட்டுக்கொண்டே கையில் பார்த்தால் இரண்டு மூன்று சிடிக்கள் இருந்தன. "இல்ல தம்பி கலைஞரின் ஆசியில் விழா நல்ல முறையில் நடக்குது. அதனால 'உளியின் ஓசை' படத்தை போட்டியில்லாம தேர்ந்தெடுக்க சொல்லலாம்ன்னு படத்தோட கேஸட் எடுத்துட்டு உள்ளே போலாம்னா செக்யூரிட்டி விடமாட்டேங்கிறான்". நிருபர்"சார் எந்த கருமத்துல இதை போட்டியில்லாம தேர்ந்தெடுக்க சொல்றீங்க"
  • "ஹாலிவுடில் நலிந்த கலைஞருக்கு 4 லட்சம் நிதியுதவி தருவதாக தலைவர் அறிவிக்கபோறாரு. "லின்சே லோகன்"க்கு கலைஞர் விருதும் "சான்ட்ரா புள்ளாக்"க்கு அண்ணா விருதும் கொடுக்க போறாரு. நீங்களே சொல்லுங்க தம்பி இதெல்லாம் சொன்னா 'உளியின் ஓசை'க்கு ஆஸ்கார் கிடைக்கும்ல?"
நிருபர்"ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே, நீங்க போங்க சார் ஆஸ்கார் உங்களுக்கு தான்"
  • நிருபர் இந்த வேலையே வேணாம்ன்னு எண்ணிக்கொண்டே வெளியில் வந்தால் வெளியே "உண்ணாவிரதம்"ன்னு ஒரு போர்டை கண்டு ஆச்சிரியபட்டார். இங்க யாருடான்னு பார்த்தா நம்ம மருத்துவர் அய்யா மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். "இனி ஆங்கில படங்களில் யரும் குடிக்கும், புகை பிடிக்கும் காட்சி வைக்க கூடாது. மேலும் ஆஸ்காரில் தமிழனுக்கு 5% இடஒதுக்கீடு வேண்டும். அதில் உள் ஒதுக்கீடாக 2% எங்களுக்கு(ஜாதிக்கு) ஒதுக்க வேண்டும். எங்களுக்காக கலைஞர் என்ன செய்திருக்கிறார்?."ன்னு கேட்க நிருபர் தலை சுற்றி கீழே விழுகிறார்.
(பி.கு: இதில் வரும் அனைத்தும் காமெடிக்காக எழுதியது. யாரும் தயவுசெய்து சீரியஸாக எடுக்க வேண்டாம்) ஏதோ சொல்ல வர்ரீங்கன்னு தெரியுது...அப்டியே கீபோர்டை நாலு தட்டு தட்டி சொல்ட்டு போங்க...

3 comments:

Anonymous said...

Okla

ஆகீல் முசம்மில் said...

thanx ல மலேசிய

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல நகைச்சுவை தொடருங்கள்