Monday, September 7, 2009

ஒரு கலக்கல் பதிவு

இன்றைய தத்துவம்
  • 1) செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது. [கோவில்ல செருப்ப தொலைச்சுட்டு சைஸ் சரியா இருக்கிற செருப்புக்காக வெயிட் பண்ணும் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ]
  • 2)பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

ஸ்கூல் ஃபர்ஸ்டா வர வழிகள்

  • நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு ஸ்கூல் போயிரலாம். நீங்கதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்!!!

நான் பொதுவா 6.00 மணிக்கு போய் குட ஸ்கூல் ஃபர்ஸ்ட் தாங்க

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...

  • நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

  • நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

  • நாட்டாமை : ?!?!

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

  • திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

  • புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

  • வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)
இம்சை அரசன் 24ம் புலிகேசி (Ver 2008-Software Eng)

அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

  • இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு.


No comments: