Saturday, September 5, 2009

டாக்டர் விஜய்க்கு 5 யோசனைகள்

நம்ம டாக்டர் விஜய் சவுண்டு விட்டாலும் விட்டாரு அவர எல்லோரும் சேர்ந்து வார்றாங்க. அடுத்த படம் வேட்டைக்காரன் அப்படின்னு சொல்றாங்க. அடுத்த ரஜினி கனவில் இருந்த நம்ம டாக்டர் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர். ஆக பிரமோசன் ஆகிவிட்டதால் ஏதோ எம்.ஜி.ஆர். படம் ரேஞ்சுக்கு படத்துக்கு பேர் வேற வச்சாச்சு அப்படியும் படம் போனியாகாமல் இருக்க தான் இந்த சில யோசனைகள்
  • பல பேர் பாடல்காட்சிகளுக்கு எழுந்து சென்றுவிடுவதால் ஆங்கில படம் மாதிரி பாடல் காட்சிகளே இல்லாமல் படம் எடுத்து உலகத்தரம் அல்லது ஹாலிவுட் தரம் என்று சொல்லலாம்
  • பலர் இண்டர்வெல்லுடன் அப்பீட் ஆகிவிடுவதால் இண்டர்வெல்லுக்கும் கட் சொல்லிவிடலாம்
  • ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று சொல்லி விற்றால் ஓவ்வொருவரும் இன்னொருவரை அழைத்து வருவார்கள் அப்படியாவது கூட்டம் சேர வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்கலாம்
  • சிறு வயதில் பேய் படம் ஓடும் தியேட்டர்களில் படம் முழுவதும் யார் பார்க்கிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்ததாக நினைவு அது மாதிரி விஜய்யும் தன் படத்துக்கு ஏதாவது பரிசுத் திட்டம் அறிவிக்கலாம். முக்கியமாக தான் நடிக்கும் படத்தின் கதை என்ன என்று கேள்வி வைத்தால் பரிசுத் தொகையும் மிச்சமாகும்
  • தன் படம் ஓடும் தியேட்டர்களில் ஏசி ஒழுங்காக வேலை செய்யுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் வெயில் காலத்தில் தூங்குவதற்காகவாவது சிலர் வரலாம்

1 comment:

Anonymous said...

nice