Tuesday, November 10, 2009

சபித்தல்

 • பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.
'....ஒரு மூமினை சபித்தவன் அவனை கொலை செய்தவன் போலாவான்' என்பது நபிமொழி. ஸாபித் பின் ழஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது.
 • பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்.

Monday, November 2, 2009

இவர்கள் இனி என்ன பண்ணலாம்? Idea

விஜய் -- ராம நாராயணன் படத்தில் நடிக்கலாம்.

 • அஜித் -- திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன திரைப்படங்களில் நடிக்கலாம்.

சரத்குமார் -- சித்தப்பா சீரியல் ஆரம்பித்து அதில் முதலமைச்சராக நடிக்கலாம் (அதிலாவது நாற்காலி கிடைக்கும்)

 • விஜயகாந்த் -- மரியாதை போன்ற ஆஸ்கார் பிலிம் நடிக்காமல், கலைஞர் மற்றும் அம்மா வை திட்டாமல் வடிவேலு, போண்டா மணி, சிங்கமுத்து வை திட்டலாம்

விஷால் -- அரிவாள் கடை ஒன்னு ஆரமிக்கலாம். patner இயக்குனர் ஹரி

 • ராமதாஸ் -- T.V ல காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வாசிக்கலாம்

இயக்குனர் விக்ரமன் -- T.V சீரியல் டைரக்ட் பண்ணலாம்.

 • T.R -- சிம்பு மற்றும் குரளரசனுடன் சேர்ந்து திருந்துங்கடா திருந்தாதீங்கடா (போடா போடி) படம் ஆரமிக்கலாம்.

FROM சர்தார்ஜி TO பில் கேட்ஸ்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
 • அதில்:
 • அன்பிற்குரிய பில் கேட்ஸ்,
சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.
 • 1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

 • 3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin' மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
 • 5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?
6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.
 • 7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.
 • 9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?
இப்படிக்கு,
சர்தார்ஜி