Wednesday, October 28, 2009

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டு 5 மணிநேரத்தின் பின் மீட்பு

 • ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்றுக் காலை 9.30 மணியளவில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டில்லி நோக்கிப் புறப்பட்டது. பிற்பகல் 3.30 மணி அளவில் ஜார்கண்ட் - மேற்கு வங்காள எல்லையில் உள்ள மேற்கு மிட்னாபுர் மாவட்டத்துக்கு அந்த ரயில் வந்த போது வழிமறிக்கப்பட்டது.
ஜார்கிராம் என்ற ரயில் நிலையத்தைக் கடந்து பன்ஸ்தாலா ரெயில் நிலையத்தை நோக்கி அந்த ரயில் சென்றது. அந்த பகுதி முழுவதும் அடர்ந்த காடுகளைக் கொண்டதாகும்.
 • ஜார்கிராமில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்றபோது தண்டவாளத்தின் குறுக்கே மரங்களும், மரக்கிளைகளும் போடப்பட்டு இருப்பதைப் பார்த்த டிரைவர் ஆனந்த ராவ் உடனே, ரயிலை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, அருகில் உள்ள புதர்களில் மறைந்திருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் ஓடி வந்து ரயிலைச் சூழ்ந்து கொண்டனர்.
மேலும், ரயில் சாரதி ஆனந்த ராவ் மற்றும் உதவி சாரதி கே.ஜே.ராவ் இருவரையும் மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர். அதே நேரத்தில், ரயிலைச் சுற்றிலும் மற்றவர்கள் நின்று கொண்டனர். எனவே ரயிலும், அதில் இருந்த சுமார் ஆயிரம் பயணிகளும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.
 • பொலிசாருக்குத் தகவல்
இது குறித்து, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும், பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 • உடனடியாகப் பொலிசார் மற்றும் துணை இராணுவப்படையினர் பன்ஸ்தாலா காட்டுக்கு விரைந்தனர். அப்போது நடந்த தேடுதல் வேட்டையில், தண்டவாளத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையே, ரயில் சாரதிகள் கடத்தல் குறித்து, 'பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் அமைப்பி'ன் புதிய தலைவர் சந்தோஷ் பத்ரா சில நிபந்தனைகளை விதித்தார்.
 • "ரயில் சாரதிகளை நாங்கள் கடத்தவில்லை. `பந்த்' அழைப்பை மீறி ரயிலை ஓட்டி வந்ததால், எங்களுடன் அழைத்து வைத்திருக்கிறோம். அவர்களுக்கோ, ரயில் பயணிகளுக்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்லர். விரைவில் விடுதலை செய்து விடுவோம். எங்களுடைய தலைவர் மகோதாவை விடுவிப்பது உட்பட 22 அம்ச கோரிக்கைகள் உள்ளன.
மேற்கு வங்காள மாநில அரசு அதிகாரிகள் அல்லது ரயில்வே மந்திரி மம்தா பானர்ஜி இங்கு வந்து எங்களுடைய மக்களின் நிலைமையைப் பார்க்க வேண்டும். அவ்வாறு வந்தால் ரயில் சாரதிகளை விடுதலை செய்து விடுவோம்."
 • இவ்வாறு சந்தோஷ் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ரயில் டிரைவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தனர்.
 • அதே நேரத்தில், மேற்கு வங்காள முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தொடர்பு கொண்டு ரயில் கடத்தல் பற்றிய தகவல்களை கேட்டார். மாநில உள்துறை செயலாளர் மற்றும் பொலிஸ் டி.ஜி.பி. ஆகியோரை மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்தார்.
மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கை குறித்து கொல்கத்தாவில் பேட்டியளித்த முதல்-மந்திரி புத்ததேவ்,
 • "மாவோயிஸ்ட் ஆதரவுடன் செயல்படும் மக்கள் அமைப்புத் தலைவர் மகோதாவை விடுதலை செய்யும் பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
இராணுவத்துக்கு உத்தரவு
 • இந்நிலையில், ரயில் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு செல்லுமாறு மத்திய துணை இராணுவப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாபுர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள அத்தனை படைகளும் தேடுதல் வேட்டைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் பொலிஸ் உள்ளிட்ட துணை இராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாவோயிஸ்ட்டுகளுடன் துப்பாக்கிச் சமர் நடந்தது.
 • எனினும், கூடுதலாக துணை இராணுவப்படையினர் வருவதை பார்த்ததும், இரவு 7.00 மணியளவில் ரயில் சாரதிகளை விடுதலை செய்துவிட்டு மாவோயிஸ்ட்டுகள் தப்பி ஓடி விட்டனர்.
சுமார் 5 மணி நேரமாக நீடித்த ரயில் கடத்தல் முடிவுக்கு வந்தது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

யாஹூ நிறுவனத்தின் இலவச 'ஜியோசிட்டிஸ்' சேவை நிறுத்தம்

டொட் காம் வர்த்தகம் உச்சத்தில் இருந்த போது ஜியோசிட்டிஸை 3 பில்லியன் டொலர் கொடுத்து வாங்கியது யாஹூ.
 • ஆனால் இந்த தளத்தையும், இலவச வெப் ஹோஸ்டிங் சேவையையும் தொடர்ந்து தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது.
இப்போது புதிதாக கட்டண வெப் ஹோஸ்டிங் திட்டத்தை ஆரம்பித்துள்ள யாஹூ (ஏற்கனவே கட்டண ஹோஸ்டிங் உண்டு. அது தனி.), ஆரம்ப கட்டச் சலுகையாக ஒரு வருடத்துக்கு 5 டொலர் மட்டுமே என இப்போது அறிவித்துள்ளது.
 • கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்ட யாஹூ, அதன் பலனாக மூன்று மடங்கு லாபம் ஈட்டியதாகக் கணக்கு காட்டியது (விற்பனையில் 12 சதவிகித வீழ்ச்சி கண்டதும் இந்த ஆண்டுதான்).
எனவே இதே வழியை மேலும் சில வருடங்களுக்குப் பின்பற்றும் திட்டத்தில் உள்ளது யாஹூ. அதன் விளைவுதான் இந்த ஜியோசிட்டிஸ் சேவை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இணையதள உலகில் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களுக்கு ஜியோசிட்டிஸ் மூடப்பட்ட அறிவிப்பு பெரும் கவலையை அளித்துள்ளது. 1995இல் ஜியோசிட்டிஸ் உதயமானது. அன்றைக்கு இணையதளம் என்பதே பெரும் கனவாகத்தான் இருந்தது இந்தியா போன்ற நாடுகளில்.
'நமக்கு ஒரு இணைய தளம் அமைக்க வேண்டுமென்றால் பெரிய அளவு பணம் செலவாகுமோ என்று பலரும் தயங்கிய போது, யார் வேண்டுமானாலும் சொந்தமாக இணையதளத்தை அமைத்துக் கொள்ளலாம்' என்று அறிவித்தது ஜியோசிட்டிஸ் தான். அதன் பிறகு இந்த தளத்தின் வளர்ச்சியைப் பார்த்து 3 பில்லியன் டொலர் கொடுத்து 2005இல் வாங்கியது யாஹூ.
 • கடந்த ஏப்ரல் மாதமே இந்த சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக யாஹூ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்

சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்
 • இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)
 • உணவு அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச்செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5) பானம்
 • அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)
 • அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள்இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள்அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப்பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)
 • ஆடை (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான)இரு தரப்பாரும் தம்இறைவனைப் பர்ர்ர்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர்இறைவனை)நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள்தாயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். (22:19)
(
 • அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)
 • தோற்றம் ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதிபடிந்திருக்கும். (80:40)
 • (பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது - ஒருவரையொருவர்முன்னோக்கியவர்களாக,
அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)
 • படுக்கை அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக்கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும்இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (7:41)
 • எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள்கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள்வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கிஉங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில்பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம்கூறப்படும்). (39:73)
"
 • வரவேற்பு "நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும் அதில்தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும் பெருமை அடித்துக்கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39:72)
 • அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களைபிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆர்ருகள் ஓடிக்கொண்டிருக்கும்அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின்மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தானபாக்கியமாகும். (61:12)
 • தங்குமிடம் அது சுட்டெரிக்கும் நெருப்பாகும் (101:11)
அவர்கள் நரகில் கருகுவார்கள் (83:16)
 • அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ளகண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது. (32:17)
முன்னேற்பாடு மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதானையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
 • அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)
 • நிரந்தரம் நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள்நிராகரிக்கிறார்களோஅவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில்என்றென்றும்இருப்பார்கள் -இத்தகையவர்கள்தாம்
படைப்புகளில் மிகக் கேட்டவர் ஆவார்கள். (98:6)

Monday, October 26, 2009

மனித உரிமை சிக்கலில் ஆட்டநாயகன்!

ஆட்ட நாயகன் என்றொரு படம். பகீரதப் பிராயத்தனம் செய்தும் எடுபடாத பி வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது. ஒரு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விடுவது போல ஒரு காட்சியை எடுக்க வேண்டும். இதற்கு நிஜ குழந்தையையே பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் விரும்பினாராம். இவ்வளவு விபரீதமாக நமது கிரியேட்டிவிட்டி இருக்கலாமா என்று யாரும் கேட்கவில்லை. மாறாக, இயக்குநர் சொன்னதைக் கேட்டு குழந்தை ஒன்றை காட்சிக்குப் பயன்படுத்த வாடகைக்குப் பிடித்திருக்கிறார்கள். அந்தக் குழந்தையை கயிற்றில் கட்டி சின்ன துளைக்குள் இறக்குவதும் ஏற்றுவதுமாக காட்சி. கிட்டத்தட்ட பத்துமுறை இப்படி ஏற்றி இறக்கியதும் குழந்தை வீறிட்டு அழுததை பார்த்த சிலர், காட்சியை செல்போனில் வீடியோவாக எடுத்து மத்திய குழந்தைகள் நல அமைப்புக்கும் மனித உரிமை ஆணையத்துக்கும் புகாராக அனுப்பி விட்டார்களாம். விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட இந்த அமைப்புகள் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட, இந்த விஷயம் எப்படி வெளியில் போனது என்று மேட்டரை கசிய விட்டவர்கள் மீதெல்லாம் கடுப்பிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தத்ரூபம் இருக்க வேண்டியதுதான், அதற்காக குழந்தை யின் உயிருடன் இப்படியா விளையாடுவது? நமக்கெதுக்குப்பா, சொன்னா பொல்லாப்பு!

மாவோயிஸ்ட்களுடன் புலிகள் இணைவு

மாவோயிஸ்ட்களுடன் புலிகள் இணைவு : இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அறிக்கை
இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கையின்படி, இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும், தென் மற்றும், மத்திய இந்திய காடுகளில், பயிற்சி மற்றும், கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் முகாம்களையும் நடத்தி வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது.
 • இந்தத் தகவலை இந்திய எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவின் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெளிநாடு ஒன்றில் இருந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர், பி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 • இந்நிலையில், மத்திய புலனாய்வு பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, சண்டிஸ்கார் மற்றும் ஒரிசா, ஆகியஇடங்களில் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
 • அண்மையில், 12 பேரைக்கொண்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் குழு, ஒன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாகவும் மத்தியபுலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மூன்று பிரிவுகளாக பிரிந்த இந்தக்குழுக்கள், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளாவின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளன. இந்தக்குழுக்களில் ஒன்று, விழிநகரம் ஏஜென்ஸி பிரதேசத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்தத் தகவலை அடுத்து, இந்தியாவின் கரையோரப் பிரதேசங்களின்பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, மாவோயிஸ்ட்வாதிகளின் மக்கள் விடுதலை போராளி இயக்கம், தமிழீழவிடுதலைப்புலிகளின், உதவியைப் பெற்றுக்கொள்வதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன.
ஆய்வாளர்களின் கருத்துப்படி, தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த திட்டத்தின்படி இரண்டு அனுகூலங்களை பெற்றுக்கொள்கின்றனர்.
 • இந்திய படைகளுக்கு எதிராக மாவோ தீவிரவாதிகளை முனைப்புப்படுத்தல்மற்றும், இலங்கைப் படையினரிடம் சந்தித்த தோல்வியைச் சரிசெய்துகொள்வதற்காக, தென்னிந்தியாவில் புதிய தளங்களை அமைப்பதுஎன்பனவே அந்த அனுகூலங்களாகும் என ஆய்வாளர்கள்குறிப்பிட்டுள்ளனர்

Wednesday, October 21, 2009

செளந்தர்யா இயக்கம்..உதயநிதி ஹீரோ?

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புது ஹீரோ வரப் போகிறார். அவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்.
 • தற்போது தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் , பலருடைய வற்புறுத்தலின்பேரில் ஹீரோவாக சம்மதித்துள்ளதாக தெரிகிறது.
ஆதவன் படத்தில் நடிப்பில் அறிமுகம் ஆனார் உதயநிதி. அது ஒரு சிறிய காட்சிதான். ஆனாலும், இப்போது உதயநிதியை முழு நீள ஹீரோவாகப் பார்க்க பலரும் ஆசைப்படுகிறார்களாம்.
 • உண்மையில் சினிமாப் பக்கமே வராமல் இருந்தவர்தான் உதயநிதி. ஆனால் மனைவி கிருத்திகாதன், உதயநிதியை வற்புறுத்தி சினிமாவுக்குக் கூட்டி வந்தவர். கிருத்திகாவும், நடிகர் விஷாலும், விஷூவல் கம்யூனிகேஷன் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குருவி, ஆதவன் என இரு படங்களைத் தயாரித்துள்ளார் உதயநிதி. இந்த நிலையில்தான் ஆதவன் படத்தில் தலையைக் காட்டப் போக இப்போது மனைவி கிருத்திகா உள்பட பலரும் நடிக்குமாறு அனத்த ஆரம்பித்துள்ளனராம்.
 • இதனால் முழு நீள ஹீரோவாக மாற முடிவெடுத்து விட்டார் உதயநிதி என்கிறார்கள். அவரது முதல் ஹீரோ படத்தை ரஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா இயக்கக் கூடும் என்றும் தெரிகிறது. படத்தையும் செளந்தர்யாவே தயாரிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
ஹீரோயின் யாரு..?

Monday, October 19, 2009

கமலுடன் முத்தக் காட்சி: ரூ.1.25 கோடி கேட்கும் தமன்னா?

கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம் தமன்னா... இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் சூடான செய்தி.
 • 18 வயதாகும் தமன்னா, மேஜராவதற்கு முன்பே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்துவிட்டார்.
இப்போது பெரிய நடிகர்களின் விருப்பமான நாயகியாக மாறிவிட்டார்.
 • பரத், ஜெயம் ரவி, விஜய் என அவரது ஆட்டம் களைகட்டிவிட்டது. இந்த நிலையில், அவருக்கு கமலுடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கவிருக்கும் கமலின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் தமன்னா.
 • கமல் படமாச்சே... முத்தக் காட்சி இருக்குமா என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வந்ததாம். 'அப்படின்னா என் ரேட்டே வேற' என்ற ரீதியில் பேசிய தமன்னா, ரூ.1.25 கோடியை சம்பளமாகக் கேட்க, 'இவ்வளவு காஸ்ட்லி லிப்ஸ் தேவையா' என யோசித்து வருகிறாராம் ரவிக்குமார்.

Monday, October 5, 2009

உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி (வெட்டிப்பயல் edition)

நம்ம வெட்டிப்பயல் சார் உன்னை போல் ஒருவனை வச்சு வாங்கின பதிவை இங்கே போஸ்ட் பண்ணிறேன்
 • உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.
இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.
 • இப்ப‌ அந்த‌ சாமானிய‌ன் ரோலை இளைய‌ த‌ள‌ப‌தி டாக்ட‌ர் விஜ‌ய் செய்திருந்தா எப்ப‌டி இருந்திருக்கும்...அவ‌ர் கைல‌ விதவித‌மா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவ‌ர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.அடுத்து மார்க்கெட்ல‌ அவ‌ர் காய் வாங்க‌ போகும் போது ஒரு குழ‌ந்தை மேல‌ த‌க்காளி விழ‌ போகுது. அதை அவ‌ர் நாலு கிலோமீட்ட‌ர் தூர‌த்துல‌ இருந்து பார்க்க‌றாரு. அப்ப‌டியே அங்க‌ இருந்து ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்து வ‌ந்து அந்த‌ த‌க்காளியை எட்டி உதைச்சி, அந்த‌ குழ‌ந்தையைக் காப்பாத்த‌றாரு. இப்ப‌ அந்த‌ குழ‌ந்தை ஆச்ச‌ரிய‌மா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்ப‌டியே சிரிக்குது. இப்ப‌ தான் டாக்ட‌ர் முக‌த்தையே காட்ட‌றோம். இது தான் இண்ட்ரோ.உட‌னே அங்க‌ ஒரு குத்துப் பாட்டு. டாக்ட‌ர் கை வைக்காத‌ க‌ருப்பு க‌ல‌ர் ப‌னிய‌ன் போட்டு ஆட‌றாரு. அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு. அந்த‌ குத்து பாட்டு முடியும் போது, அங்க‌ ஒருத்த‌ன் ஒரு பொண்ணு இடுப்புல‌ கை வைக்க‌றான். உட‌னே ஒரு ஃபைட். அவ‌னுக்கு துணையா ஆயிர‌ம் பேர் ட்ரெயின்ல வ‌ராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்ட‌ர் அடிச்சி பிரிச்சி மேய‌ராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.
 • விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!
 • லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?
 • விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)
 • லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற‌ ஒரே ஆள் நீ தான்.விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்.............
இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?
 • ம‌ : ஹ‌லோ க‌மிஷ்ஷ்ஷ்ன‌ர் இருக்காரா? நான் தான் காஆம‌ன் மேன் பேச‌றேன்.
 • ச‌ : டேய் ம‌ண்டையா. நீ காம‌ன் மேனாடா. வேணும்னா டாப‌ர் மேனு சொல்லு. அந்த‌ நாயே வ‌ந்து உன் த‌லையை ந‌க்கி பாத்துட்டு செத்து போயிடும்.ம‌: க‌மிஷ்ன‌ர்.. நாஆன் இந்த‌ ஊரை சுத்தி பாஆம் போட‌ போறேன்.
 • ச‌ : ஏன்டா. எவ‌னோ காக்காக்கு வெச்சிருந்த‌ ம‌சால் வ‌டையை எடுத்து தின்ன‌து இல்லாம‌ பாம் போட‌ போறேனு என‌க்கே ஃபோன் ப‌ண்ணி சொல்றியா? நீ சாதார‌ண‌மா போட‌ற‌ பாமே தாங்காது. இதுல‌ க‌ட‌லைப் ப‌ருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப‌ நான் என்ன‌ ப‌ண்ணுவேன்.
 • ம‌ : நான் ஊருக்குள்ள பாம் போடாம‌ இருக்க‌ணும்னா நீங்க‌ நாலு தீவிர‌வாதியை ரிலீஈஈஸ் ப‌ண்ண‌னும்.
 • ச‌ : நாங்க‌ தீவிர‌வாதியை ரிலீஸ் ப‌ண்றோம்.. அது வ‌ரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் ப‌ண்ணாம‌ இரு.பாருங்க‌ ம‌க்க‌ளே. ஒரு க‌மிஷ்னர் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை ச‌மாளிக்க‌ வேண்டிய‌து இருக்குனு..........
சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.
 • வ‌ண‌க்க‌ம். க‌மிஷ்னர், நான்... Gaaman man பேசறேன். ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.

 • ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.
ஏ நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர்.
 • க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா?
தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.
 • க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?