skip to main |
skip to sidebar
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புது ஹீரோ வரப் போகிறார். அவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்.
- தற்போது தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் , பலருடைய வற்புறுத்தலின்பேரில் ஹீரோவாக சம்மதித்துள்ளதாக தெரிகிறது.
ஆதவன் படத்தில் நடிப்பில் அறிமுகம் ஆனார் உதயநிதி. அது ஒரு சிறிய காட்சிதான். ஆனாலும், இப்போது உதயநிதியை முழு நீள ஹீரோவாகப் பார்க்க பலரும் ஆசைப்படுகிறார்களாம்.
- உண்மையில் சினிமாப் பக்கமே வராமல் இருந்தவர்தான் உதயநிதி. ஆனால் மனைவி கிருத்திகாதன், உதயநிதியை வற்புறுத்தி சினிமாவுக்குக் கூட்டி வந்தவர். கிருத்திகாவும், நடிகர் விஷாலும், விஷூவல் கம்யூனிகேஷன் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குருவி, ஆதவன் என இரு படங்களைத் தயாரித்துள்ளார் உதயநிதி. இந்த நிலையில்தான் ஆதவன் படத்தில் தலையைக் காட்டப் போக இப்போது மனைவி கிருத்திகா உள்பட பலரும் நடிக்குமாறு அனத்த ஆரம்பித்துள்ளனராம்.
- இதனால் முழு நீள ஹீரோவாக மாற முடிவெடுத்து விட்டார் உதயநிதி என்கிறார்கள். அவரது முதல் ஹீரோ படத்தை ரஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா இயக்கக் கூடும் என்றும் தெரிகிறது. படத்தையும் செளந்தர்யாவே தயாரிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
ஹீரோயின் யாரு..?
No comments:
Post a Comment