Wednesday, October 28, 2009

யாஹூ நிறுவனத்தின் இலவச 'ஜியோசிட்டிஸ்' சேவை நிறுத்தம்

டொட் காம் வர்த்தகம் உச்சத்தில் இருந்த போது ஜியோசிட்டிஸை 3 பில்லியன் டொலர் கொடுத்து வாங்கியது யாஹூ.
  • ஆனால் இந்த தளத்தையும், இலவச வெப் ஹோஸ்டிங் சேவையையும் தொடர்ந்து தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது.
இப்போது புதிதாக கட்டண வெப் ஹோஸ்டிங் திட்டத்தை ஆரம்பித்துள்ள யாஹூ (ஏற்கனவே கட்டண ஹோஸ்டிங் உண்டு. அது தனி.), ஆரம்ப கட்டச் சலுகையாக ஒரு வருடத்துக்கு 5 டொலர் மட்டுமே என இப்போது அறிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்ட யாஹூ, அதன் பலனாக மூன்று மடங்கு லாபம் ஈட்டியதாகக் கணக்கு காட்டியது (விற்பனையில் 12 சதவிகித வீழ்ச்சி கண்டதும் இந்த ஆண்டுதான்).
எனவே இதே வழியை மேலும் சில வருடங்களுக்குப் பின்பற்றும் திட்டத்தில் உள்ளது யாஹூ. அதன் விளைவுதான் இந்த ஜியோசிட்டிஸ் சேவை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இணையதள உலகில் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களுக்கு ஜியோசிட்டிஸ் மூடப்பட்ட அறிவிப்பு பெரும் கவலையை அளித்துள்ளது. 1995இல் ஜியோசிட்டிஸ் உதயமானது. அன்றைக்கு இணையதளம் என்பதே பெரும் கனவாகத்தான் இருந்தது இந்தியா போன்ற நாடுகளில்.
'நமக்கு ஒரு இணைய தளம் அமைக்க வேண்டுமென்றால் பெரிய அளவு பணம் செலவாகுமோ என்று பலரும் தயங்கிய போது, யார் வேண்டுமானாலும் சொந்தமாக இணையதளத்தை அமைத்துக் கொள்ளலாம்' என்று அறிவித்தது ஜியோசிட்டிஸ் தான். அதன் பிறகு இந்த தளத்தின் வளர்ச்சியைப் பார்த்து 3 பில்லியன் டொலர் கொடுத்து 2005இல் வாங்கியது யாஹூ.
  • கடந்த ஏப்ரல் மாதமே இந்த சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக யாஹூ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

No comments: