Wednesday, September 30, 2009

உன்னைப்போல் ஒருவன்-மொக்கை edition

நண்பகல் 12 மணி. அந்த உயர்ந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான். கையில் மதிய உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், கைப்பேசி மற்றும் ஒரு சிறிய கணிணி. மாடியில் கிடக்கும் ஒரு கிழிந்த பாயில் உட்கார்ந்து - சுற்றும் முற்றும் பார்த்து - சோம்பல் முறித்தவாறே - கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.

  • அதே வேளையில், நகரில் ஒரு வீட்டில் ஒரு பெண் வீட்டுவேலை செய்துகொண்டிருக்கிறார். அப்போது தொலைபேசி அடிக்கிறது. எடுத்துப் பேசினால் - "உங்க புருஷனைப் பத்தி ஒரு விஷயம் சொல்லப் போறேன். அதை கேக்கறதுக்கு நீங்க தயாரா இருக்கீங்களான்னு நான் பாக்கணும். உங்க வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி மறுபடியும் கூப்பிடறேன்". அந்தப் பெண் - ஹலோ, ஹலோவென்று சொல்லச் சொல்ல, தொலைபேசி வைக்கப்படுகிறது.

மொட்டை மாடி மனிதன், தண்ணீர் குடித்தவாறே தன் கைப்பேசியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறான். பத்து நிமிடம் கழித்து - மறுபடி கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.

  • "நீ யாரு? என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியாத எதை சொல்லப் போறே?"

"நான் யாருன்றது முக்கியமில்லே. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம். ஆனா அதுக்கு முன்னாடி கவனமா கேளு. நான் சொல்ற இந்த நாலு பொருட்களை எடுத்து உங்க வீட்டு காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே வைக்கணும். உன்னுடைய கைப்பையிலிருந்து கைக்குட்டை, அலமாரியிலிருந்து உன் சென்ட் - அதாவது நாத்தமருந்து, இன்னிக்கு காலையில் நீ செய்த சாம்பார் மற்றும் உன் புருஷனோட ஒரு பழைய பனியன் - இந்த நாலு பொருட்களையும் வெளியே வெச்சிட்டு வா. அடுத்து 30 நிமிஷம் கழிச்சி மறுபடி கூப்பிடுறேன்."

  • "நீ சொல்றத கேக்கலேன்னா?"

"எனக்கு ஒண்ணும் நஷ்டம் கிடையாது. உன் புருஷனைப் பத்தி ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்னு பாத்தேன். அப்புறம் அந்த ரகசியம் உனக்குத் தெரியாமலேயே போயிடும். பரவாயில்லையான்னு முடிவு பண்ணிக்கோ."

  • டொக்.

"ஹலோ, ஹலோ"

  • -------------------------------

மொட்டை மாடி. இப்போது வேறொரு எண்ணை அழுத்துகிறான்.

  • "ஹலோ"

"உன் வாழ்நாளிலேயே உனக்குப் பிடிச்ச செய்தி ஒண்ணு சொல்றேன். கேட்டுக்க தயாரா இருக்கியா?"

  • "யார் நீ? என்ன செய்தி அது?"

"உடனே உன் வீட்டு ஜன்னலிலிருந்து வெளியே எட்டிப் பார். எதிர் வீட்டிலிருந்து ஒருவர் சில பொருட்களை எடுத்து வந்து வெளியே வைப்பாங்க. அடுத்த பத்து நிமிடங்களுக்கு அப்படியே பாத்திட்டு இரு. நீ ரொம்ப நாளா எதிர்பார்த்தது நடக்கும்."

  • ----------------------------

எழுந்து போய் வெளியே நகரத்தைப் பார்க்கிறான். மொட்டை மாடியிலிருந்து நல்ல வியூ. ஆனால், உச்சி வெயில் மண்டையை பொளக்கவே, மறுபடி வந்து நிழலில் உட்கார்ந்து - படபடவென்று நெட்டி முறித்தவாறே - மதிய உணவுப் பொட்டலத்தை பிரித்து நிதானமாக சாப்பிட ஆரம்பிக்கிறான்.

  • ------------------------------------------

முதலில் பார்த்த பெண் வீடு.

  • "தொலைபேசியிலே பேசினது யாருன்னே தெரிய்லியே. இவரோட பேசலாம்னா ஸ்விச்ட் ஆஃப்னு வருது. எங்கே போய் தொலைஞ்சாரோ தெரியலே. சரி, அவன் சொல்றத கேக்குறத தவிர வேறே வழி தெரியல. அந்த நாலு பொருட்களையும் எடுத்து வெளியில் வெச்சிடுவோம்."

பொருட்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்.

  • ----------------------

இரண்டாவதாக பார்த்த பெண் (எதிர்) வீடு:

  • "ஹலோ.."

"ஆமா. நீங்க சொன்ன மாதிரியே எதிர் வீட்லே அவங்க பொருட்களை எடுத்து வெளியே வெச்சாங்க. அந்த பொருட்கள் கிட்டே வந்த தெரு நாய்கள், வாசனை பார்த்தவுடன், அலறி அடித்து ஓடிடுச்சுங்க. இனிமே அதுங்க இந்த தெருவுக்கே வராதுன்னு நினைக்கிறேன்".

  • டொக்.

  • ------------------

மறுபடி முதல் வீடு:

  • "நான் சொன்ன மாதிரியே செஞ்சதுக்கு நன்றி".

"உனக்கு எப்படி தெரிஞ்சுது."

  • "ஹாஹா.. நடக்கறதை நான் பாத்துக்கிட்டே இருக்கேன்".

"நீ யாருன்னு சொல்லு. நாய்களை ஏன் இந்த தெருவை விட்டு துரத்தினே?"

  • "பொதுமக்களுக்கு பிரச்சினை பண்ணுதுன்னு நகராட்சியே நாய்களை பிடிச்சிட்டு போகுது. நானோ வெறும் துரத்தித்தானே விட்டேன். அவங்க பண்ணா சரி. அதுவே நான் பண்ணால் தப்பா?"

"அது சரிதான். நாய்ங்களால் எங்களுக்கு பிரச்சினைதான். அதுக்கு எதுக்கு எங்க வீட்டை செலக்ட் பண்ணே? நீ யாரு"

  • "கடைத் தெருவுலே, சூப்பர் மார்க்கெட்லே ஜோடியா ஷாப்பிங் பண்ணும்போது புருஷனை பொண்டாட்டி திட்டிக்கிட்டே வருவாங்களே - அவனை மாதிரி நானும் ஒரு அப்பாவி மனுஷந்தான். நாய்களால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்களை துரத்த என்ன வழின்னு யோசிக்கும்போதுதான், இந்த ஐடியா எனக்கு தோணிச்சு. நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வேண்டியதில்லே. இனிமே நீங்க கொஞ்ச நாளைக்கு தெருவுலே பயமில்லாமே நடமாடலாம். சம்பவாமி யுகே யுகே..."

டொக்.

  • -------------

"அப்பாடா. அந்த மூணு பொருட்களால் வீட்லே பயங்கர கப்பு. என்னாலேயே தாங்கவே முடியல. பாவம் அந்த நாய்ங்க என்ன பண்ணும். ஓடியே போயிடுச்சுங்க. ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா. எல்லாம் அவளோட பொருளாவே எடுத்துப் போட்டா, என் மேலே சந்தேகம் வந்துடும்னுதான், என்னோட பனியனையும் எடுத்துப் போடச் சொன்னேன். இனிமே நிம்மதியா வீட்டுலே இருக்கலாம். ஐயய்யோ.. லஞ்ச் அவர் முடிஞ்சிடுச்சே. கீழே மேனேஜர் கத்துவாரே. போய் வேலையை ஆரம்பிக்கணும்".

  • ட்ரிங்.. ட்ரிங்..

"என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்கல்லே. வரும்போது உங்களுக்கு புது பனியன் வாங்கிட்டு வந்துடுங்க. இன்னிக்கு இன்னொரு சமாச்சாரம் நடந்துச்சு. சாயங்காலம் சொல்றேன். வெச்சிரட்டா"

  • டொக்.

மாடியிலிருந்து மெதுவாக கீழிரங்கிப் போக, காமிரா அவர் பின்னால் zoom out ஆகிறது.

  • சுபம்.
(நமது பதிவர் ஒருவர் ட்ரை பண்ணின சொந்த கதை சோக கதை)


Tuesday, September 29, 2009

s.m.s இல்லே

தமிழ் எழுத்துகளிலேயே எது அழகு.. யாருக்கும் சொல்லாதே (நீ மற்றும் நா) 8) 8)
  • உனக்கு பிறந்த நாள் பரிசா என்ன வேண்டும் மகனே..
  • ஒண்ணும் அதிம வேண்டாம்.. ஜஸ்ட் ஒரு ரேடியோ..அதை சுற்றி ஒரு ஸ்போர்ட்ஸ் கார்..
வாழ்க்கையிலே 3 மட்டும்தான் எப்ப வரும்னே தெரியாது.. பணம், சாவு.. .அப்புறம் வந்து .. வந்து.. என் எஸ்.எம்.எஸ்
  • எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்..
  • சின்ன பார்ட்டி கூட உண்டு..
  • சில நெருக்கமானவர்களுக்குத்தான் அழைப்பே..
  • பரிசுப்பொருள் கொண்டுவர வேண்டாம்..
  • ஜஸ்ட்..ஒரு அழகான பொண்ணு கூட்டி வந்தா போதும். என்னை கல்யாணம் பண்ண
  • சிறந்த மனிதன் - நீ
  • சிறந்த நண்பன் - நீ
  • சிறந்த உள்ளம் படைத்தவன் - நீ
  • சிறந்த உறவு -அதுவும் நீ
  • நல்ல அழகு - கொஞ்சம் நிறுத்து - இது டு மச்.. இப்போ நான்..ஹிஹி
  • நான் அழகான,இனிமையான, இந்த உலகத்திலேயே அழகு படைத்த ஒருவனை கொலை பண்ண வேண்டும் என்று இருந்தேன்..
  • அப்புறம் தான் தெரிந்தது - தற்கொலையும் ஒரு சட்டவிரோத செயல் என்று ..
  • ஜிங்ஜ்சாக்ங்கொட்
  • சிங்சாங் மட்ட்..
  • டின்க்கோங்க் சிக்னிங்
  • ட்ரிம்ம் சம் சொய்ங்...
  • அட நிறுத்துப்பா. அதான் புரியலைல... அப்புறம் ஏன் படிக்கிறே.
  • நாம ஏன் தண்ணிரை குடிக்கிறோம் ?
  • ஏன்னா.. அதை திண்ண முடியாது

சிரிக்க கொஞ்சம் பழைய ஜோக்

  • வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
  • அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
  • "இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
  • "தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
  • "இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
****************************************************************
  • நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
  • என்ன சொல்றீங்க
  • இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
****************************************************************
  • எங்க வீடு கோயில் மாதிரி....
  • அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?
****************************************************************
  • நேர்முகத்தேர்வில் : உங்கள் பெயர் என்ன ?
  • ஆசாமி : கமல் !
  • தேர்வாளர் : வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க ?
  • ஆசாமி : கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!
  • தேர்வாளர் : ???!!!
****************************************************************
  • என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
  • பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
****************************************************************
  • நான் நீச்சல் கத்துக்கேறன்
  • எங்கே...?
  • தண்ணியிலதான்...!
****************************************************************
  • உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
  • ஓட்டுவீடு, அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

கடத்த வந்த பயங்கரவாதியைச் சுட்டுக் கொன்ற பெண்

இளம் பெண்ணைக் கடத்த வந்த பயங்கரவாதிகளை, அவர்களிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்துச் சுட்டு ஓடஓட விரட்டிய சம்பவம் ஜம்மு காஷ்மீர் பெண்களுக்கு சற்று உற்சாகத்தையும் புது தெம்பையும் கொடுத்திருக்கிறது. புலியை முறத்தால் விரட்டிய காலம் போய் துப்பாக்கியால் பயங்கரவாதியை விரட்டும் நிலைக்கு பெண்களின் வீரம் இன்று உயர்ந்திருக்கின்றது என்றால்..... ஜம்மு காஷ்மீரில் ரசூரி மாவட்டத்தில் 6 தீவிரவாதிகள் ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு குடும்பத்தினருடன் இருந்த இளம் பெண்ணைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் மிரட்டினர். ஆனால் பெற்றோர்கள் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பெற்றோர்களை அடித்துத் தாக்கினர். தலைதெறிக்க ஓட்டம் தொடர்ந்து நடந்த போராட்டத்தை பார்த்துக் கொதித்துப்போன இளம்பெண் ரக்சனா கவுசார் ஒரு பயங்கரவாதி மீது பாய்ந்து அவரை சுவர் மீது தள்ளி விட்டார். அந்த பயங்கரவாதியின் ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பிடுங்கினார். உடனடியாக பயங்கரவாதிகளை நோக்கிச் சுட்டார். ஒரு பயங்கரவாதி பலியானார். இன்னொருவருக்குக் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மற்றவர்கள் தலைதெறிக்கத் தப்பித்து ஓடினர். இந்தச் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓர் இளம் பெண் பயங்கராவதிகளிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி விரட்டியது குறித்து அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ந்து போயினர். மேற்படி பெண்ணை பாராட்டினர். இருப்பினும் தப்பித்து ஓடிப்போன பயங்கரவாதிகளால் தமக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம் எனக் கூறி, அருகில் உள்ள பொலிசார் தமக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இளம்பெண் ரக்சனா கூறுகையில், "பயங்கரவாதியிடம் பறித்தத் துப்பாக்கியைப் பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டேன். எனக்கு கிராம பாதுகாப்பு கமிட்டியினர் கொடுத்த துப்பாக்கி சுடும் பயிற்சி இந்நேரத்தில் கைகொடுத்து உதவியது. இது தான் என்னையும், என் குடும்பத்தினரையும் காப்பாற்றியது" என்றார்

"ஒபாமா கொல்லப்படவேண்டியவரா"? -"FACE BOOK '' கில் கருத்துக் கணிப்பு

இன்று பலரையும் கவர்ந்துவரும் 'பேஸ் புக்' எனும் சமூக இணையத்தளத்தினூடாக அமெரிக்க இரகசிய சேவை புதுமையான கருத்துக்கணிப்பு ஒன்றைப் பதிவேற்றம் செய்திருக்கின்றது.
  • "அமெரிக்கஜனாதிபதிபராக்ஒபாமாகொல்லப்படவேண்டியவரா?" - இந்தத்தலைப்பிலானகருத்துக்கணிப்பேஅது. "ஆம்"', "இல்லை", "இருக்கலாம்" என்றவாறுதத்தமதுகருத்தைவெளிப்படுத்தும்வகையில்இந்தக்கருத்துக்கணிப்பு(The Poll) கடந்தசனிக்கிழமைபதிவேற்றம்செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த கருத்துக் கணிப்பினூடாக அமெரிக்க இரகசிய சேவை விசாரணைகளை நடத்தி வருகிறது.
  • இதுதொடர்பில்இரகசியசேவைப்பேச்சாளர்டர்ரின்பிளக்போட் (Darrin Blackford,) கருத்துதெரிவிக்கையில்,
"இந்த கருத்து கணிப்பு தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள 'பேஸ் புக்' சமூக இணையத்தள குழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
  • அமெரிக்கஇரகசியசேவைவிசாரணைகளுக்குத்தாம்முழுஒத்துழைப்புவழங்குவதாகவும்அவர்களுக்குதேவைப்படும்தகவல்களைநிறுவனம்வழங்கும்எனவும் 'பேஸ்புக்' இணையத்தளபேச்சாளர்பெர்ரிஸ்கினிட்தெரிவித்துள்ளதாகபிபிசிஇணையத்தளம்செய்திவெளியிட்டுள்ளது

Sunday, September 27, 2009

பிறந்ததில் இருந்து என்னத்த கிழிச்சேன்

நான் பிறந்ததில் இருந்து என்னத்த கிழிச்சேன் என்று facebook அப்ப்ளிகாசொன் ஒன்று லிஸ்ட் ஒன்றை தந்தது நான் பிறந்தது 25/09/1989 என்று நான் கொடுத்தும் பின்வரும் தகவல்கள் கிடைத்தது
  • I was born on a Monday and since my birthday...
நான் பிறந்தது திங்களாம் இன்று வரை அது எனக்கு தெரியாது
  • I've been living for 20 years
இருபது வருடம் இருக்கிறேன் அது எனக்கு தெரியும் என்னுடைய பிறந்த நாள் இரண்டு நாளைக்கு முன் தான் கொண்டாடினேன்
  • I've been living for 240 months
240 மாதமாம்
  • I've been living for 1,043 weeks
1,043 வாரங்களாம்
  • I've been living for 7,307 days
7,307 நாட்களாம்
  • I've been living for 175,372 hours
175,372 மனித்தியாலமம்
  • I've been living for 10,522,349 minutes
10,522,349 நிமிடங்கலாம்
  • I've been living for 631,340,945 seconds
631,340,945 வினாடிகளாம்
  • I've breathed more than 100,000,080 times!
100,000,080 தடைவை சுவாச வாயுவை வெளிவிட்டேனாம்
  • I've blinked my eyes more than 106,000,080 times!
106,000,080 கண் சிமிட்டி இருக்கிறேன்
  • My heart has beaten more than 736,564,430 times!
736,564,430 என் இதயம் துடித்து இருக்கிறது (சிலருக்கு இது இரண்டு மடங்காகும் ஏன் எனில் அவர்கள் இடம் வேறு ஒருவரின் இதயமும் அல்லவா இருக்கிறது ) உங்களுடைய விபரமும் அறிய இங்கே கிளிக் செய்க

Friday, September 25, 2009

இன்று எனது பிறந்த நாள்

இன்று எனது பிறந்த நாள் ஒட்டி புதிய வலைப்பூ ஒன்று ஆரம்பித்து இருக்கிறேன் உங்களது வரைவளைப்பை எதிர் பாக்கிறேன்

கணணி வல்லுநகர்கள் நடிக்கும் புதிய படப் பெயர்கள்

1. G mail son of hot mail
  • 2. Ram தேடிய motherboard
3. 7 GB Google காலனி
  • 4. எனக்கு 20 MB உனக்கு 18 MB
5. புதுகடையில் இருந்து பெண்டியியாம் 4
  • 6. காலமெல்லாம் anti virus வாழ்க
7. ஹர்ட்டிச்க்கு மரியாதை
  • 8. keyboarddum நானும்
9. joystick விளையாடல்
  • 10. சொல்ல மறந்த password
11 எங்க ஊரு programmer
  • 12. ஒரு mouse in கதை
13. மொநிடோருக்குள் மழை
  • 14. எல்லாம் processor செயல்!!

நம் வாழ்க்கையுடன் புதிய t-shirt வடிவங்கள்


Thursday, September 24, 2009

அசின் டோணி 'லவ்'?

  • இதுவரை லட்சுமிராய் பக்கம் வீசிக் கொண்டிருந்த டோணி காற்று இப்போது அசின் பக்கம் வீச ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பாலிவுட்டில் பரபரப்பாய்.
லட்சுமிராய்க்கும் தனக்கும் இனம்புரியாத நெருக்கம் என்றும் அது காதலா இல்லையா தெரியாது என்றெல்லாம் தத்துவஞானிகளுக்கு மட்டுமே புரியும் வகையில் பேசி வந்தார் டோணி. டோணி சென்னை வந்தால் லட்சுமிராயுடன்தான் விருந்து சாப்பிடுவார் என்றும் கூறப்பட்டது.
  • இந்த நிலையில் அசினுடன் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தாராம் டோணி. அவ்வளவுதான்... அன்றுமுதல் பிஸின் மாதிரி டோணியுடன் ஒட்டிக் கொண்டாராம் அஸின்.
இருவரும் செல்லில் மணிக்கணக்கில் பேசுவது என்று தொடங்கிய பழக்கம், பிறந்த நாளுக்கு அசினை தனியாக அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. அத்துடன் நிற்கவில்லையாம் இப்போது.
  • இந்த நெருக்கம் இருவரையும் காதலில் பிணைத்து விட்டதாக பரபரப்புடன் பேசுகிறார்கள் பாலிவுட்டில்!

திருட்டுப்போன ஒலிம்பிக் பதக்கம் 25 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

  • அவுஸ்திரேலிய நீச்சல் வீரர் ஜோன் கோன்ராட்ஸ் 1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 1500 மீ. பிரீ ஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மெல்போர்னில் உள்ள இவரது வீட்டில் நுழைந்த திருடர்கள் (1984), ஒலிம்பிக் பதக்கம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களை அள்ளிச் சென்றனர்.
அந்த பதக்கங்கள் இணையத்தள விற்பனைக்கு வருவதாக கடந்த வாரம் விளம்பரம் செய்யப்பட்டது. வாங்க விரும்பிய ஒரு ரசிகர், கோன்ராட்ஸுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்துள்ளார்.
  • அவர் உடனடியாக பொலிஸை உஷார் செய்ய, விளம்பரம் கொடுத்த பெண் ணை கைது செய்து பதக்கங்களை மீட்டனர். சில ஆண்டுக்கு முன் அவற்றை ஒரு கடையில் சொற்ப தொகைக்கு வாங்கியதாகவும் அவற்றின் மதிப்பு தனக்கு தெரியாது என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.

Wednesday, September 23, 2009

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்

இணையத்தில் இப்போது கணனியில் வாசிப்பதற்கான மின்புத்தகங்கள்(EBooks) தாராளமாகவே கிடைக்கின்றன. கடைத்தெரு, நூல் நிலையம் என்று நடந்து சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்தபடியே கணனி மவுஸ் பட்டனை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை நன்றாகத்தான் இருக்கிறது. அதைத்தவிர இணையத் தளங்களிலிருந்து இலவசமாகவே எத்தனையோ தமிழ், ஆங்கில மின் புத்தகங்களை சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது.. தமிழில் அதிகளவு மின்புத்தகங்கள் கிடைக்கின்றன. ஈழத் தமிழ் மண்ணின் ஆக்கங்களாக திகழும் அரும்பெரும் நூல்களின் களஞ்சியமாக www.noolaham.net என்ற மின்நூலகம் திகழ்கின்றது. அதேபோல் தமிழக இணையத்தள இலவச நூலகங்களாக www.chennailibrary.com, www.projectmadurai.org/pmworks.html, www.tamilvu.org/library/libcontnt.htm போன்ற பல தளங்கள் காணப்படுகின்றன. இந்த வகையான இணையத்தள நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் மின்புத்தகங்கள் பெரும்பாலும் PDF File முறையிலும் HTML வகையானகோப்புக்களாகவுமே காணப்படுகின்றன. அதேபோல் ஆங்கிலத்திலும் http://manybooks.net, www.mobipocket.com, www.free-ebooks.net, www.ereader.com/ereader/eBooks/freebooks.htm? போன்ற பல தளங்களிலிருந்து பல்வகையான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். அதேவேளை ஆங்கிலமொழி மின் நூல்கள், பலவகையான E-Reader என்று கூறப்படும் இன்னொரு மென்பொருள் கொண்டு மின்நூல்களை வாசிக்கும் முறையை கொண்டிருக்கின்றன. இந்த வாசிப்பு மென்பொருளானது அழகான வடிவத்தை நிறங்களை பின்னணி படங்களை உருவாக்கும் வசதி கொண்டிருப்பதால் அதன் மூலம் நாம் வாசிக்கும் மின் புத்தகத்தின் அழகு மேம்படுகிறது.தமிழ் மின்னூல்களுக்கு இந்தமுறை இருப்பதாக தெரியவில்லை. (யாரவது இருந்தால் சொல்லுங்கோ) எதிர்காலத்தில் நிறைய உருவாகலாம். இப்போது ஆங்கில E-Reader கள் சிலவற்றின் மூலம், தமிழ் மின்நூல்களை நாம் எப்படி அழகுறச் செய்வது என்று பார்ப்போம். இப்படியான நூல்களை நீங்கள் செய்து மற்றவரும் பயன்படும்படி செய்து கொள்ளலாம். eReader மென்பொருட்கள் iPhone, iPod touch, BlackBerry, Palm OS, PocketPC, Windows Mobile, Smartphone Symbian போன்றவற்றிலும் பாவிக்கும் வகையில் இருப்பதால் இப்படி உருவாக்கும் தமிழ் மின்புத்தகங்களை இந்த மின் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்போரும் அவற்றில் பதிவு செய்துவைத்து வாசிக்க முடியும். (பரீட்சித்து பார்க்கவில்லை) ஆங்கில வாசிப்பு மென்பொருட்கள் பலவகை உண்டு. இவை இலவசமாகவே கிடைக்கின்றன. உதாரணத்திற்கு eReader, microsoft Lit, Plucker, MobiPokcet, Ebook Maestro, FBReader எனப் பலவகை காணப்படுகின்றன. முதலில் eReader ல் எப்படி தமிழ் மின்புத்தகம் உருவாக்குவது என்று பார்க்கலாம். eReader இதற்கு தயார் படுத்த வேண்டியது 1) கதை அல்லது ஏதாவது தமிழ் ஆக்கம் 2) eReader Pro for Windows 3) Open office Text document 4) பாமினி எழுத்துரு அல்லது அந்த வகையை சார்ந்த இன்னொரு எழுத்துரு. 5) அவசியமேற்படில் பொங்குதமிழ் உருமாற்றி (www.Suratha.com) 1) முதலில் http://www.ereader.com/ என்ற இணையத்தளத்திலிருந்து வாசிப்புக்கான மென்பொருளை (eReader Pro for Windows) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.இதை கணனியில் நிறுவி வைத்துக் கொள்ளவும். குறிப்பு: இதே இணையத்தளத்தில் அல்லது manybooks.net இல் நிறைய இலவச ஆங்கில மின் புத்தகங்கள் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து இந்த reader மூலம்வாசிக்கலாம். ( *.Pdb என்ற வகையிலான மின்நூல்கள் மட்டுமே.) 2) நீங்கள் எழுதிய அல்லது யாராவது நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆக்கம், கதை, கவிதை போன்றவை, பாமினி வகையை சேர்ந்த எழுத்து முறையால் ஆனதென்றால் (4) வது பகுதிக்கு போங்கள். 3) unicode முறையிலோ TSCI அல்லது வேறெந்த முறையிலோ இருக்கும் ஆக்கத்தை பாமினி முறைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பொங்கு தமிழ் மூலம் உங்கள் கதையை வெட்டி ஒட்டி பாமினி முறைக்கு மாற்றவும்.( http://www.suratha.com/uni2bam.htm )பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியிலிருந்து பாமினி உருவிற்கு மாற்றிய கதையினை copy செய்து கொள்ளவும். 4) Open office text document ஐ திறந்து அதில் பாமினி எழுத்துருவில் உள்ள கதையை Paste செய்யவும். இந்த document ஐ Save as மூலம் Save Type ——– AportisDoc (Palm *.Pdb) வகையைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளவும். open office தரவிறக்கம் செய்யும் முகவரி http://www.openoffice.org/ இப்போது கதை தயார். eReader ஐ திறந்து அதற்குள் கதையை எடுத்து வைப்பதன் (அல்லது File ————> add Books) மூலம் புதிய வடிவில் கதையை வாசிக்கலாம். எழுத்துக்கள் முதலில் புரியாத வடிவில்காணப்படும். Menu வில் view —-> view setting ல் சென்று bamini எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளவும். இங்கே டிசைன், பாமினி குடும்ப வேறுவகை எழுத்துரு, நிறம் இவைகளை மாற்றி கொள்ளலாம். கீழே உள்ளSave ஐ பயன்படுத்தி பதிந்து வைத்துவிட்டால்மீண்டும் eRaeder ஐ திறக்கும்போது விரும்பிய தெரிவு மாறாமல் இருப்பதைக் காணலாம். நன்றி:இணையம்

USB Drive இல் பாவிப்பதற்கான பயனுள்ள நான்கு மென்பொருட்கள்

USB DRIVE இல் பயன்படுத்தவென பயனுள்ள நான்கு மென்பொருட்களைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.

1.VIRUS தாக்கத்திலிருந்து உங்கள் USB Drive களை பாதுகாப்பதற்கான மென்பொருள். THUMBS SCREW என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் USB இல் வைரஸ் இலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவியதன்(Install) பின்னர் System Tray Icon இல் வலது சொடுக்கின் (Right Click) மூலம் Make USB Writeable என்பதை தெரிவுசெய்து உங்கள் USB ஐ VIRUS இலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி: Thumbscrew Download

2. பாதுகாப்பாக உங்கள் கணனியிலிருந்து USB Drive ஐ அகற்றுவதற்கான மென்பொருள்.

தரவிறக்க சுட்டி: USB Disk Ejector Download

3.DeskDrive எனப்படும் உங்கள் கணனியிலுள்ள Hard drives களுக்கு Shortcut களை வழங்கி இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்.

மென்பொருள் சுட்டி: DeskDrive Download

4. உங்கள் USB Drive இல் காணாமல் போன கோப்புக்களை (Documents Folders) மீட்பதற்கான SyncToy என்னும் மென்பொருள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி: SyncToy Download


Facebook இன் புதிய இடைமுகம் (Interface)-Facebook lite

சமூக வலைத்தளமான Facebook புதியதொரு Facebook lite என்னும் இலகுவான பயனாளர் இடைமுகத்தை (User Interface) தனது இணைய பயனாளர்களுக்காக (Facebook's User) வழங்கியுள்ளது. இது twitter க்கு போட்டியான ஒரு வருகை. முன்னைய இயல்புநிலை இடைமுகத்தை(standard Interface) விட அதி வேகமான கொண்டிருக்கிறது (Interface) கொண்டிருக்கின்றது. சிறிது காலத்துக்கு முன்னர் பரீட்சார்த்த (Testing) இணையப்பதிப்பாக இருந்த Facebook Lite தற்பொழுது பொது வெளியீடாக எல்லோரினதும் பாவனைக்கு வந்துள்ளது.
அதற்கான தள முகவரி: Facebook Lite

வாழ்க்கை கம்ப்யூட்டர் உடன் எப்படி இருக்கும்

அவனவன் கஷ்டபட்டு ஒரு டூல் கண்டுபுடிச்சா அதை crack பண்ண எவ்ளொ கஷ்டப்படுறோம்.

ஆமாம் யா, வளராடி .. நல்லா வளருங்கோன்னு அனுப்புவீங்ளாக்கும்?

சோத்துக்கு ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி போல இருக்கு..'( உலகம் உருப்படும் )

என் பேரு ஆகில் , இனிமே என் பேரு DJ MA ... நாங்களும் மிக்ஸ் பண்ணுறோம் இல்ல

மணம் புடிக்கிற மாதிரி சோறு சமைபிங்களா..

எவ்ளோ வசதியா இருக்கும்ம்னு தாய்மார்கள் சொல்லுவாங்களே. அப்போ father of foreign country யாரு? Software இஞ்சினியர்களா?

முடியல

இஸ்கூலுல பிட் அடிச்ச பழக்கம்தான்.. ஹிஹி

Tuesday, September 22, 2009

உலகத்த திருத்த ஒரு ட்ரை

படத்தை ஒழுங்கா பார்க்க படத்தில் கிளிக் பண்ணி பெருசா பாருங்க