Thursday, August 26, 2010

நானும் எனது பதிவுகள் பற்றிய நிர்வாண உண்மைகளும்

 சகல வலைப்பதிவர்களுக்கும் ஒரு அவசர செய்தி என்னங்க இத கொஞ்சம் வாசிங்க 

 
நானும் எனது பதிவுகள் பற்றிய நிர்வாண உண்மைகளும் 

என் பெயர் ஆகில் பதிவுலகில் நுழைந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் என்னை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது என்பதே உண்மை  இதற்கு காரணம் என்ன என யோசிக்கும் போது சில எண்ணங்கள் மனதில் தோன்றியது

  • நான் ஏறத்தாழ 200 பதிவுகளை போட்டு இருக்கிறேன் ஆனால் அதில் 50 க்கும்  குறைந்தது  தான் சொந்த பதிவாக இருக்கிறது (உண்மையாவே அம்புட்டு தாங்க ) 
  • நானும் பெரிதாக மற்றவர்களின் வலைபூக்களை வசிப்பதும் இல்லை அவர்களது பதிவு பற்றி விமர்சிப்பதும் இல்லை 
  • எனது வலைப்பூ வாசர்கள் இடும் கருத்துகளுக்கு பதில் அளிப்பதும் இல்லை மற்றவர்களின் வலைப்பூக்களுக்கு சென்று எனது கருத்தை பகிர்வதும் இல்லை
  • என் சொந்த கருத்தை கூட என் வலைப்பூ ஊடாக பதுவுகலாக தெரியபடுதினதும் குறைவு 

இப்ப எல்லாம் என்னத்த போட்டு என்னனு கூட தோணுதுங்க

முன்பெல்லாம் ஒரு நாளுக்கு 800 தொடக்கம் 1000 வரையான வாசகர்கள் வருவார்கள் இப்போது 100 -200 வரைதான் வராங்க அதுவும் கூகிள் மூலமே வருகிறார்கள்
கடி ஜோக் னு டைப் செய்து கூகிள் இல் தேடி பாருங்க நம்ம வலைப்பூ முதலாவதா இருக்குங்க அது மாதும் தான் நான் வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து நடந்த ஒரே நால்ல மேட்டார்

நான் கேக்க வந்த மாட்டரே வேறைங்க எந்த செயலா செய்வதா இருந்தாலும் ஒரு ஊக்கம்  வேணும் அந்த ஊக்கத்தை  பெறனும்னா  என்ன நடைமுறைகளை கடை பிடிக்கணும் உங்க கருத்துக்காக காத்து இருக்கேங்க 

தலைவா கடைசியா ஒரு மேட்டர் நான் ஒரு போஸ்ட் போட்ட ஆரம்பத்தில் ஒரு ஐந்து பேர் தான் வசிக்கிரங்க அனா அந்த அந்த ஐந்து பேர் ஓட்டு போடத்தான் ஒரு ஐன்பது பேராவது வாசிப்பாங்க

Friday, April 23, 2010

tamil25






Wednesday, April 21, 2010

கூகிள் டாக் பற்றி

கூகிள் டாக் பற்றி 
Google Talk என்பது இணைய உரையாடல் மற்றும் இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் ஒரு கூகிளின் சேவையாகும். கூகிள் டாக் 24 ஆகஸ்ட் 2005 முதல் வெள்ளேட்டத்திலுள்ளது. வேறு சில இணைய உரையாடல் மென்பொருட்களைப் போன்றல்லாது கூகிள் டாக் துதுவன் திறந்த XMPP protocol ஐப் பாவிப்பதோடு வேறு இணைய உரையாடல் மென்பொருட்களையும் கூகிள் டாக் உடன் இணைவதையே கூகிள் விரும்புகின்றது.





இதனை வெளியிட்ட தினத்தில் இருந்து கூகிள் டாக் மென்பொருள் விண்டோஸ் 2000, விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 2003 சேவர் இயங்குதளத்தில் மாத்திரமே கிடைக்கின்றது. ஏனைய இயங்குதளங்களில் உள்ளவர்கள் ஜபர்'கெயிம் போன்ற இணைய உரையாடல்கூகிள் ஜிங்கிள் என்ற பெயருடன் இணையமூடான ஒலி அழைப்புக்களை வெளியிட்டுள்ளனர். மென்பொருட்களிற்கூடாக இணைந்துகொள்ளலாம் (மேலே குறிப்பிட்ட இயங்குதளங்கள் உட்பட). எனினும் இணையமூடான ஒலி அழைப்புக்கள் கூகிள் டாக்கில் மாத்திரமே வேலை செய்யும். தொழில்நுட்பத்தினூடாக


வரலாறு

23 ஆகஸ்ட் 2005 ஆப்பிள் X கணினியூடான ஜபர்இணைய உரையாடல்ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் நுழைந்தவர்களிற்கு கூகிள் டாக் இணைய உரையாடல்மின்னஞ்சலூடாகக் வரும் சில வாரங்களில் கிடைக்கும் என்றனர். இவ்வாறு ஜிமெயில்மின்னஞ்சலூடாக உரையாடலில் ஈடுபடுவது கூகிள் டாக் பாவனையாளர்களை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. சேவையா முன்மொழியப் பட்டிருந்தது. கூகிளின் போர்ட் (Port) 5222 இச்சேவையில் இணையமுடியும். 7 பெப்ரவரி 2006 இல் இருந்து சேவை தொழில்நுட்பத்திலமைந்த

தொழில் நுட்பத் தகவல்கள்
ஒத்தியங்கும் தன்மையே கூகிள் டாக்கின் பலம் என கூகிள் கூறியுள்ளது. கூகிள் டாக் ஜபர் மற்றும் XMPP தற்போதுள்ள் செய்திகளைப் பரிமாறவும் உதவியது. 17 ஜனவரி 2006 இலிருந்து கூகிள் சேவரிலிருது சேவருக்கான எந்தவொரு மீண்டும் அழைக்கும் (dialback protocol) ஜபர் தொழில் நுட்பமுள்ள் சேவரை ஆதரிக்கத் தொடங்கியது.
கூகிள் டாக் உரையாடல்கள் யாவும் தானாகவே ஜிமெயில் மின்னஞ்சலில் ஓர் கோப்புறைக்குள் சேமிக்கப் படும். இந்நடைமுறையானது ஓரிடத்தில் உரையாடல்களைச் சேமிப்பதால் தேடல்களை இலகுவாக்குவதோடு எந்தக் கணினியில் சேமித்தோம் என்ற பிரச்சினையும் கிடையாது.




நன்றி விக்கிபீடியா

Thursday, February 4, 2010

முக்கிய தகவல்

இவ்வலைப்பூவின் சகல செயற்படும் நிறுத்தி வைக்க பட்டுள்ளது நமது பதிவுகளை வாசிக்க விரும்பின் தமிழ்25 இல் சந்திக்கவும்

Friday, January 8, 2010

கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?

கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
  • அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......
1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard
  • 4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்
5 , முறை - ப்ராசசரில் சிக்கல்
  • 6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்
7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

Monday, December 14, 2009

கை தொலைபேசி இடுப்பு எலும்பை பாதிக்கிறது

மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. துருக்கி நாட்டில் உள்ள சுலைமான் டெமிரல் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டோல்கா அட்டாய் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்து உள்ளது.இடுப்பு பெல்டில் செல்போன்களை பொருத்தி வைத்து நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் அது எலும்புகளை பலவீனப்படுத்தி விடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இடுப்பு பெல்ட்டில் செல்போன்களை வைத்து இருக்கும் 150 ஆண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 மணி நேரத்துக்கு என 6 ஆண்டுகள் அவர்கள் இடுப்பு பெல்ட்டில் செல்போனை வைத்து இருந்தால் அவர்களின் இடுப்பு எலும்பு லேசாக பலவீனமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Wednesday, December 9, 2009

உங்கள் நண்பரின் இன் கை தொலைபேசியை SMS மூலம் Restart செய்யலாம்.

79 inverted comma வை உங்கள் மொபைல் இல் டைப் செய்து உங்கள் Friend இன் மொபைல் இற்கு SMS ஆக அனுப்பவும். இந்த tricks Nokia 1110,1110i,1112,1100, 2100 ற்கு மட்டுமே பொருந்தும். NOTE: உங்களது mobile மேற்குறிப்பிட்ட Nokia 1110,1110i,1112,1100, 2100 ஆக இருந்தால் உங்களால் இந்த SMS ஐ type செய்து அனுப்ப முடியாது.

Tuesday, November 10, 2009

சபித்தல்

  • பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.
'....ஒரு மூமினை சபித்தவன் அவனை கொலை செய்தவன் போலாவான்' என்பது நபிமொழி. ஸாபித் பின் ழஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது.
  • பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்.

Monday, November 2, 2009

இவர்கள் இனி என்ன பண்ணலாம்? Idea

விஜய் -- ராம நாராயணன் படத்தில் நடிக்கலாம்.

  • அஜித் -- திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன திரைப்படங்களில் நடிக்கலாம்.

சரத்குமார் -- சித்தப்பா சீரியல் ஆரம்பித்து அதில் முதலமைச்சராக நடிக்கலாம் (அதிலாவது நாற்காலி கிடைக்கும்)

  • விஜயகாந்த் -- மரியாதை போன்ற ஆஸ்கார் பிலிம் நடிக்காமல், கலைஞர் மற்றும் அம்மா வை திட்டாமல் வடிவேலு, போண்டா மணி, சிங்கமுத்து வை திட்டலாம்

விஷால் -- அரிவாள் கடை ஒன்னு ஆரமிக்கலாம். patner இயக்குனர் ஹரி

  • ராமதாஸ் -- T.V ல காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வாசிக்கலாம்

இயக்குனர் விக்ரமன் -- T.V சீரியல் டைரக்ட் பண்ணலாம்.

  • T.R -- சிம்பு மற்றும் குரளரசனுடன் சேர்ந்து திருந்துங்கடா திருந்தாதீங்கடா (போடா போடி) படம் ஆரமிக்கலாம்.

FROM சர்தார்ஜி TO பில் கேட்ஸ்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
  • அதில்:
  • அன்பிற்குரிய பில் கேட்ஸ்,
சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.
  • 1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

  • 3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin' மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
  • 5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?
6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.
  • 7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.
  • 9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?
இப்படிக்கு,
சர்தார்ஜி