Monday, December 14, 2009

கை தொலைபேசி இடுப்பு எலும்பை பாதிக்கிறது

மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. துருக்கி நாட்டில் உள்ள சுலைமான் டெமிரல் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டோல்கா அட்டாய் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்து உள்ளது.இடுப்பு பெல்டில் செல்போன்களை பொருத்தி வைத்து நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் அது எலும்புகளை பலவீனப்படுத்தி விடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இடுப்பு பெல்ட்டில் செல்போன்களை வைத்து இருக்கும் 150 ஆண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 மணி நேரத்துக்கு என 6 ஆண்டுகள் அவர்கள் இடுப்பு பெல்ட்டில் செல்போனை வைத்து இருந்தால் அவர்களின் இடுப்பு எலும்பு லேசாக பலவீனமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

No comments: