Saturday, September 12, 2009

பிரபல பதிவர் ஆவது எப்பிடி? ஆதவன் கூறியது

எங்கன திரும்பினாலும் பிளாக் பிளாக்’னு ப்ளேக் நோய் மாதிரி பெருசா பரவி, அமிதாப் பச்சன்’லே இருந்து எங்கூரூ அரைடவுசரு வரைக்கும் பிளாக் ஆரம்பிச்சிட்டு இருக்குதுங்க.. வெள்ளைக்கார தொரை படிக்கிற டைம்ஸ் ஓப்பன் பண்ணினாலும் ப்ளாக், ப்ளாக், பளாக்’ன்னு பத்த வைச்சி இப்போ தீயை கொழுந்து விட்டு எரிய விட்டுட்டாய்ங்கே..
  • ஆக எப்பிடியோ இதை பத்தி தெரிஞ்சி இந்த பக்கம் வந்து பிளாக்’ன்னு ஒன்னு ஆரம்ப்பிச்சி எல்லார்கிட்டேயும் ஐ யூஸ் டூ ப்ளாக்கிங்’னு பீலா விட ஆரம்பிச்சிட்டோம்’லே.. அப்பிடின்னா பேமஸ் ஆகிருக்கனுமின்னு பார்த்தா அதுவுமில்ல.. இப்போ ரெண்டு ப்ளாக்கர் மீட்டை போட்டா ”என்னாங்க நாமளும் நொங்கு நொங்குன்னு கீ-போர்ட் தேய தேய தமிழிலே தட்டச்சி பதிவெழுதினாலும் இன்னும் பிரபலமாகலே’னு மேவளையே சொறிஞ்சிட்டு பேசி கொல்லுறாங்க
அந்த மாதிரி டம்மி பதிவர்களுக்காக பாடம் சொல்லிகொடுக்க போறோம்.. ஒழுங்க கிளாஸ்’க்கு வரனும் ஆமாம் சொல்லிப்பிட்டோம்...
  • நீங்க எப்பிடி பதிவெழுத வந்தீங்கன்னு முதலிலே ஜீலேபி சுத்தி பார்த்து தெரிஞ்கிட்டாச்சு, அடுத்து தமிழிலே எப்பிடி பதிவெழுத வந்தமின்னும் ஒரு சுத்து சுத்தி பார்த்துக்கோங்க.. எவனோ ஒருத்தன் வீணா போனவன் சும்மா இருக்கிறதை விட்டுட்டு படிச்சதே அப்பிடியே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி மயில் தட்டி விட்டுருப்பான். நீங்களும் அதை படிச்சி பார்த்துட்டு நாமே தட்டுனா கூட தமிழிலே வருமான்னு முன்னர் காலத்திலே டைரி’லே எழுதி வைச்சதெல்லாம் டைப் பண்ணி பார்த்து சுவத்திலே திரிஞ்சிட்டு இருக்கிற பல்லிக்கு கூட பயம் வர அளவுக்கு டெர்ரா போஸ் கொடுத்தீருபீங்க... ஆக ஏரியா’விலே தமிழ் எழுத தெரியுமின்னு பில்ட்-அப் ஆனதும் ப்ளாக்வுலகத்திலே டொப்பக்குன்னு குதிச்சிருப்பீங்க. ஓகே.. அமீர்கான் தன்னோட நாய்க்குட்டிக்கு ஷாருக் பேரு வைச்சிருந்ததே தன்னோட பிளாக்’லே போட்டு பிளாக்-வேர்ல்ட்’லே ரவுடியா ஃபார்ம் ஆவுறாரு, சிவாஜி, எம்ஜீஆர்’னு எல்லாரையும் டரியல் ஆக்கி ஜேமோ லைம்-லைட்’க்கு வந்துட்டாரு.. இங்கன ஒன்னு ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. கைய்யா புய்யா’னு கத்துனாதான் எல்லாரும் திரும்பி பார்ப்பானுக.. எப்பிடி கத்துறதுன்னு பார்க்கலாமா?
1) போனமாசந்தான் தமிழிலே டைப் பண்ண தெரிஞ்சாலும் பத்து வருசமா ப்ளாக் படிக்கிறேன். ஏழரை வருசமா பின்னூட்டபதிவரா இருந்தேன்.. இப்போ ஒன்றரை வருசா ப்ளாக் எழுதிட்டு இருக்கேன்னு சொல்லனும்.. எல்லாரோட பிளாக்’ம் படிப்பேன். எல்லாரையும் கூகிள்-ரீடரிலே சேர்த்து வைச்சிருக்கேன். ஆனா படிக்கதான் நேரமில்லை’னு சீன் போடனும். ஆக எழுதுறது இல்லாட்டியும் நிறைய படிப்பாரு போலே’னு நினைச்சிக்குவாங்க. அப்போ எப்போதான் எழுதுவீஙன்னு ஆரும் கேட்டா இப்போல்லாம் எழுதவே ஒன்னுமே தோணமாட்டேங்கிதுன்னு சொல்லனும். அப்பிடின்னா என்னான்னு அவங்க கேட்டா It's kinda writing stroke’னு பீட்டரு வீட்டுட்டு வெடுக்குன்னு வந்துறனும்.. சொல்லிட்டு அங்கனெ நின்னுங்கன்னு வைச்சிக்கோங்க.. அப்புறம் அவங்க துப்பினதை தொடைக்கிறது கிலோ கணக்கிலே துண்டு வாங்கனும்...
  • 2) இது இன்னொரு முக்கியமான பாயிண்ட்: சொல்லவந்ததை கொலைவெறியோட சொல்லனும், எப்பிடின்னா சன்னலை தொறந்தா காத்து வருதுக்கிறதே’னு எழுதுறதே கூட இப்பிடி எழுதனும், மண்ணின் அடுக்குமுறைக்கு அடங்கா வீரியமிட்டு எழுந்த விதையின் வளர்ந்த விருட்சம், தன் இருந்தலியத்தினை என் சாளரம் நுழைந்து மேனி தழுவி சென்றது காற்றாய்’ன்னு எழுதி இது தமிழா, இல்லே என்னான்னு தெறிக்க விட்டு அந்த பயலை இதுக்கெல்லாம் என்ன அர்த்தமின்னு தயவு செய்து சொல்லிருங்கன்னு கதறவிடனும். நமக்காக ஆராவது கண்ணீரு விட்டா அது ஆனந்தம் தானே? ஆக கொலைவெறி கவுஜனா பார்ம் ஆகிச்சாசு. அடுத்து கதை எழுதுறது, அது எப்பிடி தெரியுமா? ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் எல்லாத்தையும் பழைய பேப்பர் கடையிலே மொத்தமா பத்து கிலோ வாங்கிட்டு வாங்க. அதிலே இருக்கிற ஒரு பக்கத்து கதையெல்லாம் படிச்சி பாத்து அதிலே எது ஒரே மாதிரியான கதையமைப்பிலே இருக்கிறதே எல்லாத்தையும் ஒரே கதையா மாத்துங்க. உண்மையே சொல்லனுமின்னு நம்ம ஊரு பழம்பெரும் எழுத்தாளர்களெல்லாம் ஒரே கதையே கொஞ்சகாணு மாத்தி அப்புறம் தன்னோட புனைபேரையும் மாத்தி மூணு-நாலு பொஸ்தககாரவுங்களும் அனுப்பி வைச்சிருப்பாங்க, அது பிரசுரம் ஆகி வெகுமானம் வாங்கினது பத்தாமே ஏதோ ஒரு ஊரு பேரு போட்டு வாசகர்கடிதத்தை தனக்கு தானே எழுதிருப்பானுக. சரி அதை விடுங்க, நம்ம மேட்டருக்கு வருவோம். கதையே எல்லாத்தையும் கலந்து கட்டி மிக்ஸ் பண்ணிட்டிங்களா? அத அப்பிடியே ஆருக்காவது மயில் தட்டி விடுங்க, ஒன்னொன்னு இங்கன முக்கியமான விசயம், அனுப்பி வைக்கிற ஆளுக்கு அரைகொறயா தான் எல்லாமே தெரிஞ்சிருக்கனும், இல்லன்னா ஒங்களே அது இதுன்னு கேள்வி கேட்டே கொன்னுருவாய்ங்க, அதை விட முக்கியமான விசயம் ஒங்கள மாதிரியே அவரும் டீ-யானை’யா இருந்தா ஒன்னியுமே பண்ணமுடியாது. அதுனாலே பண்ணுற நாதாரிதனத்தை நாசுக்கா பண்ணுங்க.
3) தன்னோட பிளாக்’லே எழுதுறதிலே கொலைவெறி காட்டுறோமின்னு இல்லாமே மத்த இடத்திலே போய் ரத்தபூமியாக்கி, அந்த இடத்தே சொத சொதன்னு ஆக்கி, அந்த ஈரத்திலே கோலியாடிட்டு வரனும்.. அது எப்பிடின்னு கேட்கிறீங்களா? நம்மாளு தட்டுமுட்டி எப்பிடியோ (உண்மையாகவே) கதை எழுதி வைச்சிருந்தா, இதெல்லாம் எப்போவோ சுஜாதா’கிற சின்ன எழுத்தாளர் அந்த காலத்திலே கிறுக்கி வைச்சிட்டாரேன்னு சொல்லனும்.. அப்புறம் இன்னோரு நாளு அதே பதிவர் சுஜாதா பத்தி எதாவது எழுதி வைச்சிருந்தா கூட ”அவர்கள்” படத்திலே ரஜினிக்கு சோடி கட்டி நடிச்சிட்டு அவரோட உழைப்பாளி,பாபா படத்திலேல்லாம் அம்மா வேஷம் கட்டுனாங்களே அவங்களான்னு கேட்டு வைக்கனும்.. ஒடனே சுத்தி இருக்கிறவங்கல்லாம் ஆகா இவரு அவளோ பெரிய ஆளையே சும்மான்னு சொல்லுறாரே.. மண்டை பார்ட்டி’னு சொல்லிரும்.. அப்பிடியே ஃபார்ம் ஆகிறலாம்.
  • 4) இப்போ இன்னொரு முக்கியமான பாயிண்ட்: கூட்டம் சேர்க்கிறது. அது எப்பிடின்னா பாட்சா படத்திலே ரஜினி அன்பாலே சேர்ந்தகூட்டமின்னு சொல்லுறமாதிரி கெத்தா சேர்க்கனும். கூட்டம் சேர்க்கிறது பெரிய கம்பசூத்திரமில்ல, சுமாரா எழுதுறவங்களே லிஸ்ட் எடுத்து வைச்சிக்கிட்டு நீயெல்லாம் இன்னும் எழுதினேன்னா நல்லாவருவே, இன்னும் நிறையபடி! ஒலக சினிமாகள் பாரு! அது இது’னு காதல் படத்திலே வர்ற சொட்டையரு வசனமான “நீங்க நல்லா வருவீங்க தம்பி!! நீங்க நல்லா வருவீங்க!!”னு சொல்லிட்டு வரனும். இதே கேட்கிறதுங்க ஆகா நம்மளையும் நம்புறாங்களேன்னு நீங்க அடிவாங்கிற கைப்புள்ளயா இருந்தாலும் ஒங்களை வைச்சி சங்கமின்னு ஒன்னு ஆரம்பிச்சி புது கோஷ்டி பார்ம் பண்ணிருவானுக.. அப்புறமென்னா நல்லா கூவு.. ஒரக்கா கூவு’ன்னு சொல்லிட்டு கையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தா போதும்.
5) அப்பிடி இப்பிடின்னு தல’ன்னு நாலு பேரு கூப்பிடுறளவுக்கு ஃபார்ம் ஆகீட்டிங்கன்னா போதாது, அப்பிடியே ரவுடியா வாழனும், வாழ்ந்துகாட்டனும்.ஆஸ்கர் வாங்கின ரகுமானிலிருந்து, இசைஞானி இளையராஜா வரைக்கும் எல்லாரையும் திட்டி தீர்த்து தள்ளனும் மைக்கேல் ஜாக்சனை பத்தி நல்லா எழுதிருந்தா கூட இடையிலே பாப்-மார்லி அளவுக்கெலாம் நானு MJ'வே மதிக்கிறது இல்லை’னு சொல்லனும். எதை எழுதனாலும் அதுக்கு நாலு பாகம் போட்டு இருக்கிறவனை கொன்னு தள்ளனும், உள்ளுக்குள்ளே ஒன்னுமில்லாட்டியும் படிக்கிற அரைப்பேக்கு’ங்க அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங்க்’ன்னு மனசாட்சியே இல்லாமே சொல்லுவாங்க. எல்லாத்தையும் பெருமையா எடுத்துக்கிட்டு எனக்கு இப்போ டைம் இல்லை. சீக்கிரமே எழுதுறேன்’ன்னு பொளந்து கட்டனும். அதுக்கொ இல்லே எதுக்கொன்னாலும் சரி எதுக்குமே எதையும் ஒத்துக்க மட்டும் செஞ்சிறக்கூடாது, யாராவது துறை சார்ந்த பதிவெழுதுறேன்னு கிளம்பி வந்தா இந்த வேலையே பார்க்கிறதுக்கு நீங்க பேசாமே உருப்படியா வேலையே பார்த்து முன்னேற வழியை பாருங்கன்னு அட்வைஸ் ஆறுமுகமா அவதாரம்மெடுக்கனும். அப்பிடியும் அவரு அடங்கலைன்னு வைங்க, அவரு எழுதின ஒவ்வொரு எழுத்திலையும் குத்தம் கண்டுப்பிடிச்சி பின்னூட்ட பக்கத்திலே பாண்டியாடனும்.
  • இது வரைக்கும் பதிவரிலிருந்து, பின்னூட்ட பதிவராகி அப்புறம் எளக்கியவியாதி பதிவர், தல பதிவர், கலவர பதிவர்’ன்னு படிப்படியா பிரபல பதிவர் ஆகிறதுக்கு உண்டான வழிமுறைகளை பார்த்தாச்சு’லே.. எல்லாத்தையும் ஒவ்வொன்னா அதுவும் படிப்படியா பின்பற்றிட்டு சொல்லுங்க. அடுத்து மாபெரும் பிரபல பதிவராவது எப்பிடி? மா-மாபெரும் பிரபல பதிவர் ஆவது எப்பிடின்னு அடுத்த பாகம் போடுறோம்.. இப்போ ஐயம் ஷோ பிஸீ... நோ -டைம்.. யூ சீ.....

No comments: