Friday, September 18, 2009

நியூட்டனின் மூன்றாம் விதி

ஒரு ஆளுக்கு வேலை கொடுக்கிற போது action, reaction இரண்டையும் சொல்லித்தர வேண்டும். இல்லையென்றால் குழப்பங்களை சந்திக்க நேரிடும்.

  • அது மழைக்காலம்.

அந்த லைப்ரேரிக்கு வருகிறவர்கள் எல்லாம் ஈரக் குடையை உள்ளே கொண்டு வந்து நார அடித்தார்கள். நிர்வாகி இதைத் தடுக்க ஒரு ஆளை வேலைக்குப் போட்டார். வருகிற எல்லாரும் குடையை வாசலில் இருந்த அவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று உத்தரவு போட்டார். அப்படிச் செய்யாதவர்களை உள்ளே விடக் கூடாது என்றும், மீறினால் அவருக்கு வேலை போய் விடும் என்றும் எச்சரித்தார்.

  • அந்த மனிதர் வருகிற எல்லாரிடமும் குடையை வாங்கி வைத்துக் கொண்டு டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஆள் நேராக உள்ளே போவதைப் பார்த்து ஆத்திரமடைந்தார்.

“யோவ், இங்கே ஒரு ஆள் என்ன ………………………றதுக்கா உட்கார்ந்திருக்கேன்? குடையை வெச்சிட்டு டோக்கன் வாங்கிட்டுப் போய்யா”

  • “என்கிட்டே குடையே இல்லியே?”

“அது உன் கவலை. குடையை இங்கே வெச்சாத்தான் உள்ளே போகலாம்”

இவர் பரவாயில்லை. இந்த நர்சின் கதையைக் கேளுங்கள்,

  • ஒரு டாக்டர், நர்சிடம் அரை மணிக்கொரு தரம் நோயாளி ஒருத்தருக்கு டெம்பரேச்சர் எடுக்கச் சொல்லியிருந்தார். காலையில் இந்த வேலையைக் கொடுத்து விட்டு சாயந்திரம் வந்தார். நோயாளிகளையும் தலைமாட்டில் இருந்த சார்ட்டுகளையும் பார்த்தார். குறிப்பிட்ட அந்த நர்சிடம் வந்தார்.

“அந்த ஆளுக்கு அரை மணிக்கொருதரம் டெம்பரேச்சர் எடுத்துகிட்டு இருக்கியா?”

  • ஆமாம் சார். இப்பக் கூட பதினஞ்சு நிமிஷம் முன்னே எடுத்தேன்”

“போதும் நிறுத்திடலாம். அந்தாள் செத்து மூணு மணி நேரம் ஆச்சு”


No comments: