skip to main |
skip to sidebar
ஆட்ட நாயகன் என்றொரு படம். பகீரதப் பிராயத்தனம் செய்தும் எடுபடாத பி வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது.
ஒரு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விடுவது போல ஒரு காட்சியை எடுக்க வேண்டும். இதற்கு நிஜ குழந்தையையே பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் விரும்பினாராம்.
இவ்வளவு விபரீதமாக நமது கிரியேட்டிவிட்டி இருக்கலாமா என்று யாரும் கேட்கவில்லை. மாறாக, இயக்குநர் சொன்னதைக் கேட்டு குழந்தை ஒன்றை காட்சிக்குப் பயன்படுத்த வாடகைக்குப் பிடித்திருக்கிறார்கள்.
அந்தக் குழந்தையை கயிற்றில் கட்டி சின்ன துளைக்குள் இறக்குவதும் ஏற்றுவதுமாக காட்சி. கிட்டத்தட்ட பத்துமுறை இப்படி ஏற்றி இறக்கியதும் குழந்தை வீறிட்டு அழுததை பார்த்த சிலர், காட்சியை செல்போனில் வீடியோவாக எடுத்து மத்திய குழந்தைகள் நல அமைப்புக்கும் மனித உரிமை ஆணையத்துக்கும் புகாராக அனுப்பி விட்டார்களாம்.
விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட இந்த அமைப்புகள் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட, இந்த விஷயம் எப்படி வெளியில் போனது என்று மேட்டரை கசிய விட்டவர்கள் மீதெல்லாம் கடுப்பிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
தத்ரூபம் இருக்க வேண்டியதுதான், அதற்காக குழந்தை யின் உயிருடன் இப்படியா விளையாடுவது?
நமக்கெதுக்குப்பா, சொன்னா பொல்லாப்பு!
No comments:
Post a Comment