Thursday, August 27, 2009

யார் தகுதியானவர்?

ஒரு இந்திய-அமெரிக்கக் கூட்டுக் கம்பனி. அதில் ஒரே ஒரு பொசிஷன் மட்டுமே காலியாக இருந்தது. அந்த வேலையின் Job Description ஐப் பார்த்து யாருமே விண்ணப்பிக்கவில்லை, மகேஷ் பாபு, ஜோசப் விஜய் தவிர. அது கொஞ்சம் அதிகமாகவே இந்தியாவைப் பற்றியும் அமெரிக்காவைப் பற்றியும் தெரிந்தவர்கள் மற்றும் நல்ல பொது அறிவு உள்ளவர்கள் மட்டுமே சமாளிக்கக் கூடிய வேலையென்பதால் கம்பனி இருவரின் இந்தியா மற்றும் அமெரிக்கா பற்றிய அறிவையும் பொது அறிவையும் சோதிக்கத் தீர்மானித்தார்கள். ஏதாவது கேள்விக்கு விடை தெரியாவிட்டால் ‘எனக்குத் தெரியாது' என்று பதிலளிக்க வேண்டும். ஊகத்தில் தவறான பதிலளித்தால் -1 மார்க்.
மகேஷ் பாபு சொன்ன பதில்கள் வருமாறு. சரியான பதில்கள் அடைப்புக்குள்
  • அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் எது? விடை: அலாஸ்கா. (அலாஸ்கா)
  • உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு எது? விடை: கனடா. (கனடா)
  • எந்த கோல்ஃப் ஆட்டக்காரரின் அம்மா தாய்லாந்தில் பிறந்தவர்? (கோல்ஃப் வீரர் அமெரிக்காவில் வசிக்கிறார்). விடை:டைகர் வூட்ஸ். (டைகர் வூட்ஸ்)
  • அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எஃப்.கென்னடியைக் கொன்றவனது பெயர் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (லீ ஹார்வி ஒஸ்வால்ட்)
  • இந்திய சுதந்திர தினத்தன்று இன்னொரு நாடும் சுதந்திர தினம் கொண்டாடுகிறது. அந்த நாடு எது? விடை: எனக்குத் தெரியாது. (தென் கொரியா)
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்த வருடம் உருவாக்கப்பட்டது? விடை: 1945. (1945)
  • ஆங்கிலக் கால்வாயின் நீளம் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (564 கி.மீ)
  • உலக சுற்றுச் சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? விடை: ஜூன் 5. (ஜூன் 5)
  • சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் யார்? விடை: கோனெரு ஹம்ப்பி. (கோனெரு ஹம்ப்பி)
  • குத்துச்சண்டை எந்த வருடத்தில் சட்டரீதியான போட்டியாக்கப்பட்டது? விடை: எனக்குத் தெரியாது. (1901)
  • டெஸ்ட் கிரிக்கட்டில் வேகமான சதம் பெற்றவர் விவியன் ரிச்சார்ட்ஸ். இரண்டாவது இடம் யாருக்கு? விடை: அடம் கில்கிறிஸ்ட். (அடம் கில்கிறிஸ்ட்)
  • 1973ம் வருடம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் புகழ் பெற்ற ஆஸ்திரேலியரான ராட் லேவர் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். அவரை வீழ்த்தியது யார்? விடை: விஜய் அமிர்தராஜ். (விஜய் அமிர்தராஜ்)
  • உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட ரயில்வே அமைப்பு எது? கிட்டத்தட்ட எத்தனை ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்? விடை: இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர். (இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர்)
  • சபின் (Sabin) வக்சீன் மூலம் தடுக்கப்படும் நோய் எது? விடை: எயிட்ஸ். (போலியோ)
  • இந்தியாவின் நடப்பு ரயில்வே அமைச்சர் யார்? விடை: மம்தா பேனர்ஜி (மம்தா பனர்ஜி)
ஜோசப் விஜய் சொன்ன பதில்கள் வருமாறு. சரியான பதில்கள் அடைப்புக்குள்
  • அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் எது? விடை: அலாஸ்கா. (அலாஸ்கா)
  • உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு எது? விடை: கனடா. (கனடா)
  • எந்த கோல்ஃப் ஆட்டக்காரரின் அம்மா தாய்லாந்தில் பிறந்தவர்? (கோல்ஃப் வீரர் அமெரிக்காவில் வசிக்கிறார்). விடை:டைகர் வூட்ஸ். (டைகர் வூட்ஸ்)
  • அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எஃப்.கென்னடியைக் கொன்றவனது பெயர் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (லீ ஹார்வி ஒஸ்வால்ட்)
  • இந்திய சுதந்திர தினத்தன்று இன்னொரு நாடும் சுதந்திர தினம் கொண்டாடுகிறது. அந்த நாடு எது? விடை: எனக்கும் தெரியாது. (தென் கொரியா)
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்த வருடம் உருவாக்கப்பட்டது? விடை: 1945. (1945)
  • ஆங்கிலக் கால்வாயின் நீளம் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (564 கி.மீ)
  • உலக சுற்றுச் சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? விடை: ஜூன் 5. (ஜூன் 5)
  • சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் யார்? விடை: கோனெரு ஹம்ப்பி. (கோனெரு ஹம்ப்பி)
  • குத்துச்சண்டை எந்த வருடத்தில் சட்டரீதியான போட்டியாக்கப்பட்டது? விடை: எனக்குத் தெரியாது. (1901)
  • டெஸ்ட் கிரிக்கட்டில் வேகமான சதம் பெற்றவர் விவியன் ரிச்சார்ட்ஸ். இரண்டாவது இடம் யாருக்கு? விடை: அடம் கில்கிறிஸ்ட். (அடம் கில்கிறிஸ்ட்)
  • 1973ம் வருடம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் புகழ் பெற்ற ஆஸ்திரேலியரான ராட் லேவர் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். அவரை வீழ்த்தியது யார்? விடை: விஜய் அமிர்தராஜ். (விஜய் அமிர்தராஜ்)
  • உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட ரயில்வே அமைப்பு எது? கிட்டத்தட்ட எத்தனை ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்? விடை: இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர். (இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர்)
  • சபின் (Sabin) வக்சீன் மூலம் தடுக்கப்படும் நோய் எது? விடை: எயிட்ஸ். (போலியோ)
  • இந்தியாவின் நடப்பு ரயில்வே அமைச்சர் யார்? விடை: மம்தா பேனர்ஜி (மம்தா பனர்ஜி)
விடைகளை ஒப்பிட்டுப் பார்த்த நிர்வாகிக்கு அதிர்ச்சி. இருவருமே 15 ல் பத்துக் கேள்விகளுக்கு சரியான விடையையும், ஒரு கேள்விக்குப் பிழையான விடையையும், 4 கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது என்றும் பதிலளித்திருந்தனர். இருவரில் ஒருவர் ஈயடிச்சான் காப்பி அடித்திருக்கிறார். அவர் யாரென்று சொல்லமுடியுமா?
பி. கு : தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு என்ற நடிகரின் படங்களை ஜோசப் விஜய் என்ற தமிழ் சினிமா நடிகர், அறிமுகமாகும் காட்சிகள், பாடல்கள் என்பவற்றை அப்படியே காட்சிக்குக் காட்சி காப்பி அடித்து நடிப்பதனால், அதே பெயர்களைக் கொண்ட இந்தப் போட்டியாளர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள். எனவே ஜோசப் விஜய்தான் ஈயடிச்சான் காப்பி என்ற என்ற விடை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நண்பர் ஒருவருடயா வல்லைப்பூ இருந்து பெறப்பட்டது