Thursday, August 27, 2009

பதில் சொல்லுங்க சார் பதில் சொல்லுங்க!

சும்மா பொழுது போகலை. அதுதான் சும்மா நாம எங்கியோ வாசிச்ச நாலு கேள்விகளை கேட்டுவைப்போம்னு பார்க்கிறேன். இதெல்லாம் ஜுஜுபி.... அதனால.. சும்மா ட்ரை பண்ணுங்களேன்!
  • ஒரு ஆள். காரில 5000 மைல் பயணம் செய்யவேண்டி வந்துச்சு. அவர்கிட்ட ஒரு புத்தம்புது ஸ்டெப்னி டயர் வேற இருந்துச்சு. காரோட நாலு டயர் + ஸ்டெப்னின்னு ஐந்து டயரையும் மாத்தி மாத்திப் பாவிச்சு 5000 மைல் தூரம் பயணித்தார். பயணமுடிவில் எல்லா டயர்களும் ஒரேயளவு தூரம் ஓடறதுக்கு பாவிக்கப்பட்டிருந்தது என்றால், ஒரு டயர் எத்தனை மைல் ஓடறதுக்கு பாவிக்கப்பட்டது?
  • நாலு பசங்க நாலு பொண்ணுங்களோட ஒரு ஆளில்லாத் தீவுக்கு போனாங்க. போன இடத்தில எல்லோருக்கும் காதல் தீ பத்திக்கிறது. ஒருத்தன் யாராவது ஒரு பொண்ணை காதலிக்கிற அதேவேளை, யாராவது ஒரு பொண்ணால் காதலிக்கவும் படுகிறான். நம்ம விஷால் ஒரு பொண்ணை காதலிக்கிறான். அவளோ விஜய்யை நேசிக்கிறா. சிம்பு காதலிக்கிற பொண்ணு அசினைக் காதலிக்கிற பையனை நேசிக்கிறா. த்ரிஷாவை காதலிக்கிற பையனை, நேசிக்கிற பொண்ணை நம்ம பிரபுதேவா காதலிக்கிறான். நயன்தாராவுக்கு பிரபுதேவாவை பிடிக்கவே இல்லை. அதே சமயம் நமீதா காதலிக்கிற பையன் நயன்தாராவைக் கண்டாலே கடுப்பாகிறான். அப்பிடீன்னா, சிம்புவை யார் காதலிக்கிறார்?
  • ஒரு அரேபிய ஷேக். ரொம்ப வயசாகி மரணப் படுக்கையில இருக்கார். அவருக்கு இரண்டு மகன்கள். ஆனாத் தன்னோட சொத்த பிரிக்க விரும்பல. அதனால மகன்களுக்கு ஒரு ஒட்டக ஒட்டப் போட்டி வைத்தார். 'எவனது ஒட்டகம் கடைசியாக வெற்றிக்கோட்டைக் கடக்கிறதோ அவனுக்கே என் சொத்து' என்றார். இவர்களும் கோட்டை முதலில் தன் ஒட்டகம் தொடாமலிருக்க எங்கோ எல்லாம் அலைந்தார்கள். இருவருமே கோட்டை நோக்கிப் போகவில்லை. பிரச்சினை முடிவதாயில்லை. அதனால் நம்மள போல ஒரு அறிவாளிகிட்ட பிரச்சினைக்கு ஒரு தீர்வு கேட்டாங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்யறோம், ஆனா இதுக்கு விரைவில முடிவுகட்டுங்கன்னு கேட்டாங்க. அவரும் ஒரு ஐடியா சொன்னார். மறுகணமே இரண்டு பேரும் ஆளுக்கொரு ஒட்டகத்தில் ஏறி வெற்றிக் கோட்டை நோக்கிப் பறந்தாங்க. அவர் அப்படி என்ன சொன்னார்?
  • ஒரு குடியானவன். அவங்கிட்ட 10 ஆடு, 8 கழுதை, 2 மாடு எல்லாம் இருந்திச்சு. அவன் கொஞ்சமே கொஞ்சம் மூளை கழன்றவன். அதனால மாடுகளை கழுதைன்னு சொல்லுறான். ஆக, அவங்கிட்ட எத்தனை கழுதை இருக்கு?
  • ஒரு சிம்பிளான குடும்ப ஒன்றுகூடல். அங்கே ஒரு தாத்தா, ஒரு பாட்டி, இரண்டு அப்பாக்கள், இரண்டு அம்மாக்கள், நான்கு பிள்ளைகள் (Children not Kids), மூன்று பேரப்பிள்ளைகள், ஒரு சகோதரன், இரண்டு சகோதரிகள், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், ஒரு மாமியார், ஒரு மாமனார், ஒரு மருமகள் ஆகியோர் கூடியிருந்தனர். மேலேயுள்ள எண்ணிக்கை எல்லாவற்றையும் கூட்ட 23 பேர் வரவேண்டும். ஆனால் அங்கே அதைவிட மிகக்குறைவான எண்ணிக்கையிலான ஆட்களே இருந்தார்கள் எனில், அந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் எத்தனை பேர்?
ஐந்து கேள்விக்கும் பதில் சொல்லணும்... பதில்களுக்கு கொஞ்சமாச்சும் வெயிட் பண்ணணும். ஆரம்பிக்கட்டும் அமைச்சரே ஆட்டம்... ஹா!

No comments: