இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனியை சந்திக்க தனது கடையையே விற்றுள்ளார் ஒரு ரசிகர். உத்தரப் பிரதேச மாநிலம் சஹரங்பூரைச் சேர்ந்தவர் ரவீந்திரகுமார் சைனி (23). தோனியை சந்தித்து ரவீந்திர குமார் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என அவரது காதலி விரும்பியுள்ளார்.
அதற்காக தனது கடையை விற்று விட்டு தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வந்து தங்கிவிட்டார் சைனி.
ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, கடந்த 35 நாட்களாக தோனியை சந்திக்க பல வழிகளில் அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அந்த பொன்னான நேரம் அவருக்கு கடந்த புதன்கிழமை அமைந்தது. மும்பை செல்வதற்காக ராஞ்சி விமான நிலையத்துக்கு தோனி வந்துள்ளார். அந்த நேரத்தில் பாதுகாப்பு வீரர்களின் கெடுபிடி குறைவாக இருந்ததால் தோனியுடன் சைனி கை குலுக்கினார்.
அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் உடனடியாக கிளிக் செய்தனர். சைனிக்கு அந்த புகைப்படத்தை தருவதாகவும் உறுதி அளித்தனர்.
ராஞ்சியில் சைனி நீண்ட நாட்களாகத் தங்கியிருப்பது தெரிய வந்தது. தோனியை சந்திக்க என்னைத் தொடர்பு கொண்டார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது என தோனியின் நண்பர் அனிமேஷ் குமார் என்பவர் தெரிவித்தார்.
|
Saturday, August 29, 2009
தோனியை சந்திக்க கடையை விற்ற ரசிகர்
Subscribe to:
Post Comments (Atom)







No comments:
Post a Comment