Tuesday, August 25, 2009

ஆரம்பித்து இருக்கிறேன்

என்னால் ஆனா சில துளிகள்

கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை ஆற்றுங்கள்; அடுத்த கடமை என்ன என்பது தன்னாலே புலப்படும்.

அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்பிற்கு அன்பே விலை

வாக்குவாதம் செய்யாதே. உனது மதத்தினிடத்தும் கொள்கையினிடத்தும் உனக்கு எப்படிப் பற்று இருக்கிறதோ அப்படியே மற்றவர்களுடைய மதங்களிலும் கொள்கைகளிலும் அவரவர்களும் பற்று வைக்கும்படியான உரிமையை அவர்களுக்குக் கொடு. வாக்குவாதத்தினால் மட்டும் மற்றொருவனுடைய பிழையை எடுத்துக் காட்ட முடியாது.

ஒப்பிட்டுப் பார்ப்பதை மனம் நடத்திக் கொண்டிருந்தால் அங்கே உண்மையான அன்பு இருக்க முடியாது.

செல்லும் பாதை சரியாக இல்லாதபோது,வேகமாக ஓடி என்ன பயன்

பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினனை விட நெருங்கியவன்

சிறந்த தகவல்களை வைத்திருப்பவரே வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமான மனிதர் என்பது பொது விதி.

சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல். அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.

சோதனைகள் தாம் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன

நம்முடைய உறுதியான அபிப்பிராயத்தைப் பிறர் வாயால் கேட்க எவ்வளவு மகிழ்ச்சி

அன்பில் வணிகத்திற்கு இடமில்லை; வணிகத்தில் அன்பிற்கு இடமில்லை.

2 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் சகோதரா...
தொடர்ந்து எழுதுங்கள்...
சொந்தப் படைப்புகளாக அமையட்டும்...

Aaqil Muzammil said...

நிச்சயம் நண்பனே