Sunday, August 30, 2009
Earn More Money Online Now Get $6 instantly
மிக மோசமான நுட்பத் தயாரிப்புகள்
Saturday, August 29, 2009
ஆச்சரியம் ஆனால் உண்மை ....
21 வாரம் மட்டுமே ஆனா குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஒரு கொடிய நோய்க்கு ஆளானது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். அதுவும் தாயின் கர்பப்பையை வெளியே எடுத்து ஒரு சின்ன துளை இட்டு அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இத்தகைய அறுவை சிகிச்சையில் கைதேர்ந்த மருத்துவரான Joseph Bruner, இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அந்த தாயின் கர்ப்பபையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்து முடிக்கும் தருவாயில் ஒரு மிக சிறிய கை ஒன்று அவரின் விரலை சிக்கென பற்றி கொண்டது ..ஆமாம் அது கர்ப்பபையில் இருத்த அந்த குழந்தையின் கை தான்.. ஒரு நொடி உறைந்து பொய் விட்டார் அந்த மருத்துவர் இந்த படத்தை தான் மேலே காண்கிரீர்கள்.. சிகிச்சை முடிந்து அந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர். அந்த குழந்தையின் பெயர் Samuel Alexander Armas . google search பண்ணி பாருங்கள் மேலும் விபரம் அறிய..
டிக்கெட் வசூலில் ஒரே நாளில் ரூ. 95 லட்சம் குவித்த கந்தசாமி
சீயான் விக்ரமின் கந்தசாமி ரிலீஸுக்கு வரும் முன்பே ஒரு புதிய சாதனையைப் படைத்து விட்டது. டிக்கெட் முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 95 லட்சத்தை அள்ளியுள்ளதாம் கந்தசாமி.
சீயான் விக்ரம், ஜில் ஜில் ஷ்ரியா நடிக்க, சுசி கணேசன் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்க மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் கந்தசாமி. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை உலகம் முழுக்க திரைக்கு வருகிறது கந்தசாமி.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்ததாலும், பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கிக் கொண்டிருப்பதாலும், விக்ரமின் நான்கு வேடம், படம் முழுக்க அத்தனை பாடல்களையும் அவரே பாடியிருப்பது உள்ளிட்ட காரணங்களால் கந்தசாமிக்கு ஏக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும், இதுவரை இல்லாத அளவாக 900 பிரிண்டுகள் இப்படத்துக்காக போடப்பட்டுள்ளதாம். தலைநகர் சென்னையில் மட்டும் 18 தியேட்டர்களில் போடவுள்ளனர்.
படத்துக்கான முன்பதிவு 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மட்டும் 1, 46, 976 டிக்கெட்டுகள் விற்பனையானதாம். முதல் நாள் முன்பதிவு கலெக்ஷன் ரூ. 95 லட்சமாம். எந்தத் தமிழ்ப் படத்துக்கு இந்த அளவுக்கு இதுவரை வசூல் ஆனதில்லையாம்.
கலக்கு சாமி..!
தோனியை சந்திக்க கடையை விற்ற ரசிகர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனியை சந்திக்க தனது கடையையே விற்றுள்ளார் ஒரு ரசிகர். உத்தரப் பிரதேச மாநிலம் சஹரங்பூரைச் சேர்ந்தவர் ரவீந்திரகுமார் சைனி (23). தோனியை சந்தித்து ரவீந்திர குமார் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என அவரது காதலி விரும்பியுள்ளார்.
அதற்காக தனது கடையை விற்று விட்டு தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வந்து தங்கிவிட்டார் சைனி.
ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, கடந்த 35 நாட்களாக தோனியை சந்திக்க பல வழிகளில் அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அந்த பொன்னான நேரம் அவருக்கு கடந்த புதன்கிழமை அமைந்தது. மும்பை செல்வதற்காக ராஞ்சி விமான நிலையத்துக்கு தோனி வந்துள்ளார். அந்த நேரத்தில் பாதுகாப்பு வீரர்களின் கெடுபிடி குறைவாக இருந்ததால் தோனியுடன் சைனி கை குலுக்கினார்.
அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் உடனடியாக கிளிக் செய்தனர். சைனிக்கு அந்த புகைப்படத்தை தருவதாகவும் உறுதி அளித்தனர்.
ராஞ்சியில் சைனி நீண்ட நாட்களாகத் தங்கியிருப்பது தெரிய வந்தது. தோனியை சந்திக்க என்னைத் தொடர்பு கொண்டார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது என தோனியின் நண்பர் அனிமேஷ் குமார் என்பவர் தெரிவித்தார்.
|
அழகாக இருக்க!- 12 வழிகள்!

1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.
2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.
3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.
4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.
5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!
6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!
7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!
8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.
9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.
10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.
11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.
12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.Friday, August 28, 2009
கிரிக்கெட் வசைபாடிகள் part 2 (18+) மட்டும்
ஃப்ரெட் ட்ரூமன் இங்கிலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலேயே முதன் முதலாக முன்னூறு விக்கட்டுக்களைக் கைப்பற்றிய வீரர் இவர்தான் (எல்லா நாட்டு வீரர்கள் மத்தியிலும்). இப்படிப்பட்ட ட்ரூமன் ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒரு போட்டியில் பவுண்டரி லைனில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் நின்ற இடத்தின் அருகே பெவலியனில் இருந்து களத்துள் நுழையும் வாசல் இருந்தது. அப்போது ஒரு ஆஸி விக்கட் வீழ்ந்தது, இங்கிலாந்து வீரர்கள் ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்துவிட்டு தத்தம் களநிலைகளுக்கு மீண்டனர், ட்ரூமன் உட்பட. அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த ஆஸி ஆட்டக்காரர் மக்கின்ஸி பெவலியன்-மைதானம் இடைப்பட்ட கதவை மூட முயன்று கொண்டிருந்தார். ட்ரூமன் அவரருகே போய் ‘அப்பனே, என்ன செய்கிறாய்?' என்றிருக்கிறார். மக்கின்ஸி 'கதவை மூட முயல்கிறேன்' என்று சொல்ல, ட்ரூமன் சொன்னாராம். ‘இப்போ போன வேகத்திலே திரும்பப் போகிறாய். உள்ளே போவதுக்கு வசதியாக கதவைத் திறந்துவிட்டுத்தான் போயேன்'. அடுத்த ஓவரை ட்ரூமனே வீசவேண்டியிருந்தது. ஏற்கனவே கடுப்பை எல்லாம் அடக்கி மூன்று பந்துகளைத் தடுத்த மக்கின்ஸிக்கு ட்ரூமனைக் கண்டதும் பொறுக்காமல் விசிறினார்... போல்ட் (Bowled) ஆகி திரும்பினார்.
வேட்டைக்காரன் : விஜய்யின் அறிமுக காட்சி...!!
வேட்டைக்காரன் விஜய் introduction சீன் வெளிவந்தது விட்டது - no fake, only ஒரிஜினல்
எனது நண்பன் தந்த தகவல்Earn money via internet
கந்தசாமி!
Thursday, August 27, 2009
சோனியா முன்னிலையில் காங்கிரஸில் சேருகிறார் விஜய்!
பதில் சொல்லுங்க சார் பதில் சொல்லுங்க!
சும்மா பொழுது போகலை. அதுதான் சும்மா நாம எங்கியோ வாசிச்ச நாலு கேள்விகளை கேட்டுவைப்போம்னு பார்க்கிறேன். இதெல்லாம் ஜுஜுபி.... அதனால.. சும்மா ட்ரை பண்ணுங்களேன்!
- ஒரு ஆள். காரில 5000 மைல் பயணம் செய்யவேண்டி வந்துச்சு. அவர்கிட்ட ஒரு புத்தம்புது ஸ்டெப்னி டயர் வேற இருந்துச்சு. காரோட நாலு டயர் + ஸ்டெப்னின்னு ஐந்து டயரையும் மாத்தி மாத்திப் பாவிச்சு 5000 மைல் தூரம் பயணித்தார். பயணமுடிவில் எல்லா டயர்களும் ஒரேயளவு தூரம் ஓடறதுக்கு பாவிக்கப்பட்டிருந்தது என்றால், ஒரு டயர் எத்தனை மைல் ஓடறதுக்கு பாவிக்கப்பட்டது?
- நாலு பசங்க நாலு பொண்ணுங்களோட ஒரு ஆளில்லாத் தீவுக்கு போனாங்க. போன இடத்தில எல்லோருக்கும் காதல் தீ பத்திக்கிறது. ஒருத்தன் யாராவது ஒரு பொண்ணை காதலிக்கிற அதேவேளை, யாராவது ஒரு பொண்ணால் காதலிக்கவும் படுகிறான். நம்ம விஷால் ஒரு பொண்ணை காதலிக்கிறான். அவளோ விஜய்யை நேசிக்கிறா. சிம்பு காதலிக்கிற பொண்ணு அசினைக் காதலிக்கிற பையனை நேசிக்கிறா. த்ரிஷாவை காதலிக்கிற பையனை, நேசிக்கிற பொண்ணை நம்ம பிரபுதேவா காதலிக்கிறான். நயன்தாராவுக்கு பிரபுதேவாவை பிடிக்கவே இல்லை. அதே சமயம் நமீதா காதலிக்கிற பையன் நயன்தாராவைக் கண்டாலே கடுப்பாகிறான். அப்பிடீன்னா, சிம்புவை யார் காதலிக்கிறார்?
- ஒரு அரேபிய ஷேக். ரொம்ப வயசாகி மரணப் படுக்கையில இருக்கார். அவருக்கு இரண்டு மகன்கள். ஆனாத் தன்னோட சொத்த பிரிக்க விரும்பல. அதனால மகன்களுக்கு ஒரு ஒட்டக ஒட்டப் போட்டி வைத்தார். 'எவனது ஒட்டகம் கடைசியாக வெற்றிக்கோட்டைக் கடக்கிறதோ அவனுக்கே என் சொத்து' என்றார். இவர்களும் கோட்டை முதலில் தன் ஒட்டகம் தொடாமலிருக்க எங்கோ எல்லாம் அலைந்தார்கள். இருவருமே கோட்டை நோக்கிப் போகவில்லை. பிரச்சினை முடிவதாயில்லை. அதனால் நம்மள போல ஒரு அறிவாளிகிட்ட பிரச்சினைக்கு ஒரு தீர்வு கேட்டாங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்யறோம், ஆனா இதுக்கு விரைவில முடிவுகட்டுங்கன்னு கேட்டாங்க. அவரும் ஒரு ஐடியா சொன்னார். மறுகணமே இரண்டு பேரும் ஆளுக்கொரு ஒட்டகத்தில் ஏறி வெற்றிக் கோட்டை நோக்கிப் பறந்தாங்க. அவர் அப்படி என்ன சொன்னார்?
- ஒரு குடியானவன். அவங்கிட்ட 10 ஆடு, 8 கழுதை, 2 மாடு எல்லாம் இருந்திச்சு. அவன் கொஞ்சமே கொஞ்சம் மூளை கழன்றவன். அதனால மாடுகளை கழுதைன்னு சொல்லுறான். ஆக, அவங்கிட்ட எத்தனை கழுதை இருக்கு?
- ஒரு சிம்பிளான குடும்ப ஒன்றுகூடல். அங்கே ஒரு தாத்தா, ஒரு பாட்டி, இரண்டு அப்பாக்கள், இரண்டு அம்மாக்கள், நான்கு பிள்ளைகள் (Children not Kids), மூன்று பேரப்பிள்ளைகள், ஒரு சகோதரன், இரண்டு சகோதரிகள், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், ஒரு மாமியார், ஒரு மாமனார், ஒரு மருமகள் ஆகியோர் கூடியிருந்தனர். மேலேயுள்ள எண்ணிக்கை எல்லாவற்றையும் கூட்ட 23 பேர் வரவேண்டும். ஆனால் அங்கே அதைவிட மிகக்குறைவான எண்ணிக்கையிலான ஆட்களே இருந்தார்கள் எனில், அந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் எத்தனை பேர்?
விஜய் ஹைக்கூ
கிரிக்கெட் வசைபாடிகள் (18+) மட்டும்
பாகிஸ்தானின் புகழ் பெற்ற லெக்-ஸ்பின் பந்துவீச்சாளரான அப்துல் காதிர் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே கடுப்பாகியிருந்தார். அவருக்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புகழ் பெற்று விளங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட முஷ்தாக் அகமது ஒரு ஓவரில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பால்குடிப் பையன் முஷ்தாக்கை இரண்டு முறை சிக்ஸருக்கு அடித்தான். அது ஒரு கண்காட்சி ஆட்டம் என்றாலும் காதிர் அதைக் கொஞ்சம் சீரியஸாகவே எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். முஷ்தாக்கின்பால் அந்தச் சின்னப் பையன் காட்டிய அலட்சியத்தைக் கண்ட காதிர் அவனிடம் போய், ‘ஏய், நீ சின்னப் பையன்களை ஏன் அடித்து நொருக்குகிறாய்? முடிந்தால் எந்து பந்துகளை அடி பார்க்கலாம்' என்றார். காதிரின் அந்த வேண்டுகோளை அந்தப் பால்குடிப் பையன் சிரமேற் கொண்டு நிறைவேற்றி வைத்தான்.. காதிரின் அந்த ஓவரின் 6 பந்துகளில் பெறப்பட்ட ஓட்டங்கள் வருமாறு.. 6,0,4,6,6,6. அந்தத் தொடரிலேயே அந்தப் பால்குடிக்கு இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பெரிதாக எதையும் அந்தத் தொடரில் சாதிக்காவிட்டாலும், 1989 இல் 16 வயது நிரம்பிய அந்தப் பையனின் இன்றைய சாதனைகள் மலைக்க வைப்பன. அந்தப் பையன் சச்சின் என்று நான் சொல்லவும் வேண்டுமா?
நியூசிலாந்து விக்கெட் காப்பாளரான பரோரே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடக் களம் இறங்கினார். ஸ்லிப்பில் நின்ற மார்க் வோ அவரைப் பார்த்து ‘அட, உன்னை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன்னர் உன்னை அவுஸ்திரேலியாவில எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கிறாய். கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை' என்றார். பரோரே சொன்னார், ‘நான் முன்னேறவில்லை, அதை ஒத்துக் கொள்ளுறேன். ஆனால், நீ ரொம்பவே முன்னேறிவிட்டாய். இரண்டு வருஷத்துக்கு முன் ஒரு கிழவியைக் காதலித்துக் கொண்டிருந்தாய். இப்போது அவளை விட கிழவியான ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு விட்டாயாம் என்று கேள்விப்பட்டேன்'. மார்க் வோ கப்சிப்.
உலகப் புகழ் பெற்ற இருவரின் உலகப் புகழ பெற்ற மோதல் இது. ஆஷஸ் தொடரில் துடுப்பெடுத்தாட பொதம் களமிறங்கியபோது, அப்போதைய அவுஸ்திரேலிய விக்கட் காப்பாளரான மார்ஷ் அவரைப் பார்த்துக் கேட்டார், ‘இயன், உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா நண்பனே' என்று. பொதம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார், 'என்னுடைய மனைவி என்றைக்குமே நலம். உன்னுடைய குழந்தைகள் தெருவில் போகிற வருகிற பெண்கள் எல்லோருக்கும் பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்'.
இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த மைக்ரோ பிராசசர்கள்........
கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.
1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.
1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.
1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.
1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.
1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.
1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.
1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.
1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.
1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.
2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.
2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.
2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.
2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.
2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.
2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.
2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.
2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.
2009: The Core i7 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.
ஃபேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்? (நான் அப்படித்தான் என்பது வேறு கதை) அதுவும் திருமணமானவராயோ, அல்லது காதலன்/காதலி உள்ளவராயோ இருந்தால் இதை வாசியுங்கள். உங்கள் உறவில் (கணவன்- மனைவி, காதலன-காதலி) விரிசல் விழுவதற்கு ஃபேஸ் புக்கும் ஒரு காரணமாகலாமாம். குவெல்ப் பல்கலைக்கழக (University of Guelph) மாணவர்கள் நிகழ்த்திய ஆய்வறிக்கையின் படி எவ்வளவு அதிகநேரம் ஃபேஸ் புக்கில் இருக்கும் இப்படியான ஜோடிகளுக்கிடையே பொறாமையும் சந்தேகமும் அதிகரித்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக ஒருவரது ஃபேஸ் புக் Wallல் 'நேற்றிரவு உன்னுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது' என்பது போன்ற ஒரு சின்ன தகவல் பரிமாற்றமே பூதாகரமான பிரச்சினையாக வடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்திருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் 308 மாணவ, மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவே இது. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது. பார்க்கும் கண்களிலும், பகுத்தறியும் அறிவிலும் இருக்கிறது சூட்சுமம் என்பது என் கருத்து.யார் தகுதியானவர்?
- அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் எது? விடை: அலாஸ்கா. (அலாஸ்கா)
- உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு எது? விடை: கனடா. (கனடா)
- எந்த கோல்ஃப் ஆட்டக்காரரின் அம்மா தாய்லாந்தில் பிறந்தவர்? (கோல்ஃப் வீரர் அமெரிக்காவில் வசிக்கிறார்). விடை:டைகர் வூட்ஸ். (டைகர் வூட்ஸ்)
- அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எஃப்.கென்னடியைக் கொன்றவனது பெயர் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (லீ ஹார்வி ஒஸ்வால்ட்)
- இந்திய சுதந்திர தினத்தன்று இன்னொரு நாடும் சுதந்திர தினம் கொண்டாடுகிறது. அந்த நாடு எது? விடை: எனக்குத் தெரியாது. (தென் கொரியா)
- ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்த வருடம் உருவாக்கப்பட்டது? விடை: 1945. (1945)
- ஆங்கிலக் கால்வாயின் நீளம் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (564 கி.மீ)
- உலக சுற்றுச் சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? விடை: ஜூன் 5. (ஜூன் 5)
- சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் யார்? விடை: கோனெரு ஹம்ப்பி. (கோனெரு ஹம்ப்பி)
- குத்துச்சண்டை எந்த வருடத்தில் சட்டரீதியான போட்டியாக்கப்பட்டது? விடை: எனக்குத் தெரியாது. (1901)
- டெஸ்ட் கிரிக்கட்டில் வேகமான சதம் பெற்றவர் விவியன் ரிச்சார்ட்ஸ். இரண்டாவது இடம் யாருக்கு? விடை: அடம் கில்கிறிஸ்ட். (அடம் கில்கிறிஸ்ட்)
- 1973ம் வருடம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் புகழ் பெற்ற ஆஸ்திரேலியரான ராட் லேவர் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். அவரை வீழ்த்தியது யார்? விடை: விஜய் அமிர்தராஜ். (விஜய் அமிர்தராஜ்)
- உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட ரயில்வே அமைப்பு எது? கிட்டத்தட்ட எத்தனை ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்? விடை: இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர். (இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர்)
- சபின் (Sabin) வக்சீன் மூலம் தடுக்கப்படும் நோய் எது? விடை: எயிட்ஸ். (போலியோ)
- இந்தியாவின் நடப்பு ரயில்வே அமைச்சர் யார்? விடை: மம்தா பேனர்ஜி (மம்தா பனர்ஜி)
- அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் எது? விடை: அலாஸ்கா. (அலாஸ்கா)
- உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு எது? விடை: கனடா. (கனடா)
- எந்த கோல்ஃப் ஆட்டக்காரரின் அம்மா தாய்லாந்தில் பிறந்தவர்? (கோல்ஃப் வீரர் அமெரிக்காவில் வசிக்கிறார்). விடை:டைகர் வூட்ஸ். (டைகர் வூட்ஸ்)
- அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எஃப்.கென்னடியைக் கொன்றவனது பெயர் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (லீ ஹார்வி ஒஸ்வால்ட்)
- இந்திய சுதந்திர தினத்தன்று இன்னொரு நாடும் சுதந்திர தினம் கொண்டாடுகிறது. அந்த நாடு எது? விடை: எனக்கும் தெரியாது. (தென் கொரியா)
- ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்த வருடம் உருவாக்கப்பட்டது? விடை: 1945. (1945)
- ஆங்கிலக் கால்வாயின் நீளம் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (564 கி.மீ)
- உலக சுற்றுச் சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? விடை: ஜூன் 5. (ஜூன் 5)
- சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் யார்? விடை: கோனெரு ஹம்ப்பி. (கோனெரு ஹம்ப்பி)
- குத்துச்சண்டை எந்த வருடத்தில் சட்டரீதியான போட்டியாக்கப்பட்டது? விடை: எனக்குத் தெரியாது. (1901)
- டெஸ்ட் கிரிக்கட்டில் வேகமான சதம் பெற்றவர் விவியன் ரிச்சார்ட்ஸ். இரண்டாவது இடம் யாருக்கு? விடை: அடம் கில்கிறிஸ்ட். (அடம் கில்கிறிஸ்ட்)
- 1973ம் வருடம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் புகழ் பெற்ற ஆஸ்திரேலியரான ராட் லேவர் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். அவரை வீழ்த்தியது யார்? விடை: விஜய் அமிர்தராஜ். (விஜய் அமிர்தராஜ்)
- உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட ரயில்வே அமைப்பு எது? கிட்டத்தட்ட எத்தனை ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்? விடை: இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர். (இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர்)
- சபின் (Sabin) வக்சீன் மூலம் தடுக்கப்படும் நோய் எது? விடை: எயிட்ஸ். (போலியோ)
- இந்தியாவின் நடப்பு ரயில்வே அமைச்சர் யார்? விடை: மம்தா பேனர்ஜி (மம்தா பனர்ஜி)
Tuesday, August 25, 2009
ஆரம்பித்து இருக்கிறேன்



















