மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. துருக்கி நாட்டில் உள்ள சுலைமான் டெமிரல் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டோல்கா அட்டாய் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்து உள்ளது.இடுப்பு பெல்டில் செல்போன்களை பொருத்தி வைத்து நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் அது எலும்புகளை பலவீனப்படுத்தி விடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இடுப்பு பெல்ட்டில் செல்போன்களை வைத்து இருக்கும் 150 ஆண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 மணி நேரத்துக்கு என 6 ஆண்டுகள் அவர்கள் இடுப்பு பெல்ட்டில் செல்போனை வைத்து இருந்தால் அவர்களின் இடுப்பு எலும்பு லேசாக பலவீனமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Monday, December 14, 2009
Wednesday, December 9, 2009
உங்கள் நண்பரின் இன் கை தொலைபேசியை SMS மூலம் Restart செய்யலாம்.
79 inverted comma வை உங்கள் மொபைல் இல் டைப் செய்து உங்கள் Friend இன் மொபைல் இற்கு SMS ஆக அனுப்பவும்.
இந்த tricks Nokia 1110,1110i,1112,1100, 2100 ற்கு மட்டுமே பொருந்தும்.
NOTE: உங்களது mobile மேற்குறிப்பிட்ட Nokia 1110,1110i,1112,1100, 2100 ஆக இருந்தால் உங்களால் இந்த SMS ஐ type செய்து அனுப்ப முடியாது.
Tuesday, November 10, 2009
சபித்தல்
- பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.
- பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்.
Monday, November 2, 2009
இவர்கள் இனி என்ன பண்ணலாம்? Idea
விஜய் -- ராம நாராயணன் படத்தில் நடிக்கலாம்.
- அஜித் -- திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன திரைப்படங்களில் நடிக்கலாம்.
சரத்குமார் -- சித்தப்பா சீரியல் ஆரம்பித்து அதில் முதலமைச்சராக நடிக்கலாம் (அதிலாவது நாற்காலி கிடைக்கும்)
- விஜயகாந்த் -- மரியாதை போன்ற ஆஸ்கார் பிலிம் நடிக்காமல், கலைஞர் மற்றும் அம்மா வை திட்டாமல் வடிவேலு, போண்டா மணி, சிங்கமுத்து வை திட்டலாம்
விஷால் -- அரிவாள் கடை ஒன்னு ஆரமிக்கலாம். patner இயக்குனர் ஹரி
- ராமதாஸ் -- T.V ல காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வாசிக்கலாம்
இயக்குனர் விக்ரமன் -- T.V சீரியல் டைரக்ட் பண்ணலாம்.
- T.R -- சிம்பு மற்றும் குரளரசனுடன் சேர்ந்து திருந்துங்கடா திருந்தாதீங்கடா (போடா போடி) படம் ஆரமிக்கலாம்.
FROM சர்தார்ஜி TO பில் கேட்ஸ்
புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
- அதில்:
- அன்பிற்குரிய பில் கேட்ஸ்,
சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.
- 1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.
- 3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
- 5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?
6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.
- 7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.
- 9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?
இப்படிக்கு,
சர்தார்ஜி
Wednesday, October 28, 2009
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டு 5 மணிநேரத்தின் பின் மீட்பு
- ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்றுக் காலை 9.30 மணியளவில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டில்லி நோக்கிப் புறப்பட்டது. பிற்பகல் 3.30 மணி அளவில் ஜார்கண்ட் - மேற்கு வங்காள எல்லையில் உள்ள மேற்கு மிட்னாபுர் மாவட்டத்துக்கு அந்த ரயில் வந்த போது வழிமறிக்கப்பட்டது.
- ஜார்கிராமில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்றபோது தண்டவாளத்தின் குறுக்கே மரங்களும், மரக்கிளைகளும் போடப்பட்டு இருப்பதைப் பார்த்த டிரைவர் ஆனந்த ராவ் உடனே, ரயிலை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, அருகில் உள்ள புதர்களில் மறைந்திருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் ஓடி வந்து ரயிலைச் சூழ்ந்து கொண்டனர்.
- பொலிசாருக்குத் தகவல்
- உடனடியாகப் பொலிசார் மற்றும் துணை இராணுவப்படையினர் பன்ஸ்தாலா காட்டுக்கு விரைந்தனர். அப்போது நடந்த தேடுதல் வேட்டையில், தண்டவாளத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
- "ரயில் சாரதிகளை நாங்கள் கடத்தவில்லை. `பந்த்' அழைப்பை மீறி ரயிலை ஓட்டி வந்ததால், எங்களுடன் அழைத்து வைத்திருக்கிறோம். அவர்களுக்கோ, ரயில் பயணிகளுக்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்லர். விரைவில் விடுதலை செய்து விடுவோம். எங்களுடைய தலைவர் மகோதாவை விடுவிப்பது உட்பட 22 அம்ச கோரிக்கைகள் உள்ளன.
- இவ்வாறு சந்தோஷ் தெரிவித்தார்.
- அதே நேரத்தில், மேற்கு வங்காள முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தொடர்பு கொண்டு ரயில் கடத்தல் பற்றிய தகவல்களை கேட்டார். மாநில உள்துறை செயலாளர் மற்றும் பொலிஸ் டி.ஜி.பி. ஆகியோரை மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்தார்.
- "மாவோயிஸ்ட் ஆதரவுடன் செயல்படும் மக்கள் அமைப்புத் தலைவர் மகோதாவை விடுதலை செய்யும் பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
- இந்நிலையில், ரயில் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு செல்லுமாறு மத்திய துணை இராணுவப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாபுர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள அத்தனை படைகளும் தேடுதல் வேட்டைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
- எனினும், கூடுதலாக துணை இராணுவப்படையினர் வருவதை பார்த்ததும், இரவு 7.00 மணியளவில் ரயில் சாரதிகளை விடுதலை செய்துவிட்டு மாவோயிஸ்ட்டுகள் தப்பி ஓடி விட்டனர்.
யாஹூ நிறுவனத்தின் இலவச 'ஜியோசிட்டிஸ்' சேவை நிறுத்தம்
டொட் காம் வர்த்தகம் உச்சத்தில் இருந்த போது ஜியோசிட்டிஸை 3 பில்லியன் டொலர் கொடுத்து வாங்கியது யாஹூ.
- ஆனால் இந்த தளத்தையும், இலவச வெப் ஹோஸ்டிங் சேவையையும் தொடர்ந்து தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்ட யாஹூ, அதன் பலனாக மூன்று மடங்கு லாபம் ஈட்டியதாகக் கணக்கு காட்டியது (விற்பனையில் 12 சதவிகித வீழ்ச்சி கண்டதும் இந்த ஆண்டுதான்).
- இணையதள உலகில் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களுக்கு ஜியோசிட்டிஸ் மூடப்பட்ட அறிவிப்பு பெரும் கவலையை அளித்துள்ளது. 1995இல் ஜியோசிட்டிஸ் உதயமானது. அன்றைக்கு இணையதளம் என்பதே பெரும் கனவாகத்தான் இருந்தது இந்தியா போன்ற நாடுகளில்.
- கடந்த ஏப்ரல் மாதமே இந்த சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக யாஹூ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்
சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்
- இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)
- உணவு அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச்செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)
- அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)
- அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள்இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள்அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப்பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)
- ஆடை (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான)இரு தரப்பாரும் தம்இறைவனைப் பர்ர்ர்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர்இறைவனை)நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள்தாயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். (22:19)
- அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)
- தோற்றம் ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதிபடிந்திருக்கும். (80:40)
- (பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது - ஒருவரையொருவர்முன்னோக்கியவர்களாக,
- படுக்கை அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக்கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும்இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (7:41)
- எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள்கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள்வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கிஉங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில்பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம்கூறப்படும்). (39:73)
- வரவேற்பு "நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும் அதில்தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும் பெருமை அடித்துக்கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39:72)
- அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களைபிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆர்ருகள் ஓடிக்கொண்டிருக்கும்அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின்மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தானபாக்கியமாகும். (61:12)
- தங்குமிடம் அது சுட்டெரிக்கும் நெருப்பாகும் (101:11)
- அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ளகண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது. (32:17)
- அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)
- நிரந்தரம் நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள்நிராகரிக்கிறார்களோஅவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில்என்றென்றும்இருப்பார்கள் -இத்தகையவர்கள்தாம்
Subscribe to:
Posts (Atom)