skip to main |
skip to sidebar
"டாடி பேசுறேண்டா செல்லம்.என்ன பண்ணிட்டிருக்கே".
- "ஹாய் டாடி.பாபி டால் கூட விளையாடிட்டிருக்கேன்".
"அம்மா இருக்காங்களா?"
"போனை அவங்கக்கிட்ட கொடுடா செல்லம்"
- "அம்மா,மேல் மாடி பெட்ரூம்ல ராம் அங்கிள் கூட இருக்காங்க டாடி"
ஒரு நீண்ட மௌனம் அப்பாக்கிட்டிருந்து...
"ஆனா..உனக்குத்தான் ராம்னு அங்கிள்ஸ் யாருமே இல்லையே செல்லம்?"
- "தெரியல டாடி..அம்மா அப்படித்தான் சொன்னாங்க..இப்ப மாடி பெட்ரூம்லதான் இருக்காரு..பேசுறீங்களா?"
மீண்டும் ஒரு நீண்ட மௌனம்...
"சரி செல்லம்..இப்போ நீ என்ன பண்ணனும்னா போனை அப்படியே லைன் கட் பண்ணாம மேசையில வச்சிட்டு மேல் மாடிக்குப் போய் பெட்ரூம் கதவைத் தட்டி 'டாடியோட கார் வீட்டு வாசலால வந்துட்டிருக்கு'ன்னு கத்தணும்..செய்றியா?"
"சரி டாடி..இருங்க ஒரு நிமிஷத்துல வந்துடறேன்"
கொஞ்ச நேரம் கழித்து..
"ஓகே...நீ அப்படிக் கத்தியதும் என்ன நடந்திச்சு செல்லம்?"
- "அம்மா அலறிக்கிட்டே பெட்லிருந்து குதிச்சாங்க..ரூம் பூரா அலறிக்கிட்டே ஓடினாங்க.அப்படியே கீழ இருந்த கார்பட் ல வழுக்கிக் கீழ விழுந்தாங்க..இதுவரைக்கும் எழும்பல."
"கடவுளே...! சரி ராம் அங்கிள் என்ன பண்றார் இப்ப?"
- "அவரும் அலறிக்கிட்டே எழும்பி ரூம் ஜன்னலிலிருந்து அப்படியே கீழ இருக்குற ஸ்விம்மிங் பூலுக்குக் குதிச்சிட்டாரு.நேத்துத்தானே நாங்க அதை சுத்தப்படுத்துறதுக்காக தண்ணியெல்லாம் இல்லாம வச்சிருந்தோம்.அது அவருக்குத் தெரியலன்னு நினைக்கிறேன்..அப்படியே தலையடிபட்டு..ரத்தமெல்லாம் வந்து..அவர் இப்போ செத்துட்டாருன்னு நினைக்கிறேன்."
மௌனம்..
நீண்ட மௌனம்
மீண்டும் ஒரு நீண்ட மௌனம்.
"ஸ்விம்மிங் பூல்?...நம்ம வீட்ல?..இது 456143921 இல்லையா? ஸாரி..ரோங் நம்பர்"
No comments:
Post a Comment