சில கேள்விகள் கேட்டு வைப்போமேன்னு ஒரு பதிவு. இந்தக் கேள்விகள் 'lateral thinking' வகையைச் சேர்ந்தவை. அதாவது நாம் பிரச்சனைகளை கையாளும் பொழுது சில விஷயங்களை assume செய்வோம். அப்படி செய்யாமல் fundamentalsஸிலிருந்து பிரச்சனைகளை ஆராய கற்றுக் கொடுக்கும் இந்த exercises என்று சொல்கிறார்கள்.
டோண்டு ஸார் இதையேல்லாம் முன்னாடியே கேட்டுட்டாரான்னு தெரியலை. 'புதுசு கண்ணா புதுசு'ன்னா முயன்று பாருங்க....இல்லைன்னா சொல்லுங்க வேற ஒரு கடி பதிவு போட்டுடறேன்.! :-)
- ஜாக் தரையில் செத்துக் கிடக்கிறார். ஜன்னல் வழியாக பறந்து வந்த ஒரு கூரிய கல் அவரின் சாவுக்கு காரணம். ஆனால் அவரைச் சுற்றி ரத்தம் இல்லை. தண்ணீர் இருக்கிறது.
- Barருக்குள் வரும் ஒருவர் bartenderரிடம் தண்ணீர் கேட்கிறார். அவரோதுப்பாக்கி எடுத்து hands up என்கிறார். சில நொடிகள் கழித்து வந்தவர் 'நன்றி' என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
- ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறார். உடனே தன் கவனக் குறைவால் பல உயிர்கள் பலி என்று புரிந்து கொள்கிறார்.
- கப்பல் மூழ்கியதால் ஒரு தீவில் பல நாட்கள் சிக்கியிருந்த மாலுமிகளில்ஒருவர் ஊருக்கு திரும்புகிறார். அவர் ஒரு restaurantக்கு சென்று seagull soup ஆர்டர் செய்கிறார். அதை ஒரு வாய் சாப்பிட்டவுடன் தன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்.
- ஒரு தாய்க்கு இரண்டு மகள்கள் ஒரே வருடத்தில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் டிவின்ஸ் இல்லை.
- இரு அமெரிக்கர்கள் பாரிஸில் உள்ள ஒரு ம்யூசியத்தில் நுழைய உள்ளார்கள். ஒருவர் மற்றவரின் மகனுக்கு தந்தை.
- ஒரு பூட்டிய அறையில் ஒருவர் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருக்கிறார். அவர் காலடியில் இருந்த தண்ணீரைத் தவிர அந்த அறையில் வேறேந்த பொருளும் இல்லை. அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்?
- ஜோன்ஸ் கீழே விழுந்ததால் காலில் காயம். பெரிய டாக்டர் வந்து அதை சரி செய்து விடுகிறார். இருந்தாலும் சில நாட்கள் கழித்து இந்த காயத்தால்ஜோன்ஸின் மரணம் நிகழுகிறது.
- மாடர்ன் ஆர்ட் பிடிக்காத ரோஜர், ஒரு நாள் ஒரு பெரிய ம்யூசியத்தில் உள்ள மாடர்ன் ஓவியங்களின் மேல் தண்ணீரை கொட்டி பாழடித்து விடுகிறார். இருந்தாலும் அவருக்கு ஒரு தண்டனையும் கிடைக்கவில்லை.
- கெவினும் (6 வயது) அவனுடைய அண்ணனும் (8 வயது) சோபாவில் அமர்ந்து ஒரு xxx படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அம்மா உள்ளே நுழைகிறாள். ஆனால் அவர்களை கண்டிக்கவில்லை.
1 comment:
1. நீரில் வாழும் உயிரினமாக இருக்கலாம்.
2. குணா படம் போன்று விக்கலாக இருக்கலாம்
3. பஸ் driver
4. தெரியாது
5. மாதம் குறிப்பிடாததால் சாத்தியம். அல்லது ஒரே நேரம் இரண்டு பெண்பிள்ளையும் இன்னும் பல ஆண் பிள்ளையும் பிறந்தால்? அதை ட்வின்ஸ் என்று சொல்ல முடியாது.
6. ஒரு ஆண் பிள்ளையின் அம்மாவும் அப்பாவும்.
7. பனிக்கட்டி பார் மேலே நின்று
8. லாஜிக் புரியல
9. தீ அணைக்கும் ஒருவருக்கு மாடன் ஆர்ட் பிடிக்காமல் இருப்பது சாத்தியம்
ice cube , vin diesal நடித்த xxx படம் தாரளமாக பார்க்கலாம்.
razmi
chilaw
Post a Comment