Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, November 2, 2009

இவர்கள் இனி என்ன பண்ணலாம்? Idea

விஜய் -- ராம நாராயணன் படத்தில் நடிக்கலாம்.

  • அஜித் -- திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன திரைப்படங்களில் நடிக்கலாம்.

சரத்குமார் -- சித்தப்பா சீரியல் ஆரம்பித்து அதில் முதலமைச்சராக நடிக்கலாம் (அதிலாவது நாற்காலி கிடைக்கும்)

  • விஜயகாந்த் -- மரியாதை போன்ற ஆஸ்கார் பிலிம் நடிக்காமல், கலைஞர் மற்றும் அம்மா வை திட்டாமல் வடிவேலு, போண்டா மணி, சிங்கமுத்து வை திட்டலாம்

விஷால் -- அரிவாள் கடை ஒன்னு ஆரமிக்கலாம். patner இயக்குனர் ஹரி

  • ராமதாஸ் -- T.V ல காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வாசிக்கலாம்

இயக்குனர் விக்ரமன் -- T.V சீரியல் டைரக்ட் பண்ணலாம்.

  • T.R -- சிம்பு மற்றும் குரளரசனுடன் சேர்ந்து திருந்துங்கடா திருந்தாதீங்கடா (போடா போடி) படம் ஆரமிக்கலாம்.

Monday, October 5, 2009

உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி (வெட்டிப்பயல் edition)

நம்ம வெட்டிப்பயல் சார் உன்னை போல் ஒருவனை வச்சு வாங்கின பதிவை இங்கே போஸ்ட் பண்ணிறேன்
  • உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.
இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.
  • இப்ப‌ அந்த‌ சாமானிய‌ன் ரோலை இளைய‌ த‌ள‌ப‌தி டாக்ட‌ர் விஜ‌ய் செய்திருந்தா எப்ப‌டி இருந்திருக்கும்...அவ‌ர் கைல‌ விதவித‌மா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவ‌ர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.அடுத்து மார்க்கெட்ல‌ அவ‌ர் காய் வாங்க‌ போகும் போது ஒரு குழ‌ந்தை மேல‌ த‌க்காளி விழ‌ போகுது. அதை அவ‌ர் நாலு கிலோமீட்ட‌ர் தூர‌த்துல‌ இருந்து பார்க்க‌றாரு. அப்ப‌டியே அங்க‌ இருந்து ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்து வ‌ந்து அந்த‌ த‌க்காளியை எட்டி உதைச்சி, அந்த‌ குழ‌ந்தையைக் காப்பாத்த‌றாரு. இப்ப‌ அந்த‌ குழ‌ந்தை ஆச்ச‌ரிய‌மா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்ப‌டியே சிரிக்குது. இப்ப‌ தான் டாக்ட‌ர் முக‌த்தையே காட்ட‌றோம். இது தான் இண்ட்ரோ.உட‌னே அங்க‌ ஒரு குத்துப் பாட்டு. டாக்ட‌ர் கை வைக்காத‌ க‌ருப்பு க‌ல‌ர் ப‌னிய‌ன் போட்டு ஆட‌றாரு. அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு. அந்த‌ குத்து பாட்டு முடியும் போது, அங்க‌ ஒருத்த‌ன் ஒரு பொண்ணு இடுப்புல‌ கை வைக்க‌றான். உட‌னே ஒரு ஃபைட். அவ‌னுக்கு துணையா ஆயிர‌ம் பேர் ட்ரெயின்ல வ‌ராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்ட‌ர் அடிச்சி பிரிச்சி மேய‌ராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.
  • விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!
  • லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?
  • விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)
  • லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற‌ ஒரே ஆள் நீ தான்.விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்.............
இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?
  • ம‌ : ஹ‌லோ க‌மிஷ்ஷ்ஷ்ன‌ர் இருக்காரா? நான் தான் காஆம‌ன் மேன் பேச‌றேன்.
  • ச‌ : டேய் ம‌ண்டையா. நீ காம‌ன் மேனாடா. வேணும்னா டாப‌ர் மேனு சொல்லு. அந்த‌ நாயே வ‌ந்து உன் த‌லையை ந‌க்கி பாத்துட்டு செத்து போயிடும்.ம‌: க‌மிஷ்ன‌ர்.. நாஆன் இந்த‌ ஊரை சுத்தி பாஆம் போட‌ போறேன்.
  • ச‌ : ஏன்டா. எவ‌னோ காக்காக்கு வெச்சிருந்த‌ ம‌சால் வ‌டையை எடுத்து தின்ன‌து இல்லாம‌ பாம் போட‌ போறேனு என‌க்கே ஃபோன் ப‌ண்ணி சொல்றியா? நீ சாதார‌ண‌மா போட‌ற‌ பாமே தாங்காது. இதுல‌ க‌ட‌லைப் ப‌ருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப‌ நான் என்ன‌ ப‌ண்ணுவேன்.
  • ம‌ : நான் ஊருக்குள்ள பாம் போடாம‌ இருக்க‌ணும்னா நீங்க‌ நாலு தீவிர‌வாதியை ரிலீஈஈஸ் ப‌ண்ண‌னும்.
  • ச‌ : நாங்க‌ தீவிர‌வாதியை ரிலீஸ் ப‌ண்றோம்.. அது வ‌ரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் ப‌ண்ணாம‌ இரு.பாருங்க‌ ம‌க்க‌ளே. ஒரு க‌மிஷ்னர் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை ச‌மாளிக்க‌ வேண்டிய‌து இருக்குனு..........
சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.
  • வ‌ண‌க்க‌ம். க‌மிஷ்னர், நான்... Gaaman man பேசறேன். ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.

  • ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.
ஏ நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர்.
  • க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா?
தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.
  • க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?

Wednesday, September 30, 2009

உன்னைப்போல் ஒருவன்-மொக்கை edition

நண்பகல் 12 மணி. அந்த உயர்ந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான். கையில் மதிய உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், கைப்பேசி மற்றும் ஒரு சிறிய கணிணி. மாடியில் கிடக்கும் ஒரு கிழிந்த பாயில் உட்கார்ந்து - சுற்றும் முற்றும் பார்த்து - சோம்பல் முறித்தவாறே - கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.

  • அதே வேளையில், நகரில் ஒரு வீட்டில் ஒரு பெண் வீட்டுவேலை செய்துகொண்டிருக்கிறார். அப்போது தொலைபேசி அடிக்கிறது. எடுத்துப் பேசினால் - "உங்க புருஷனைப் பத்தி ஒரு விஷயம் சொல்லப் போறேன். அதை கேக்கறதுக்கு நீங்க தயாரா இருக்கீங்களான்னு நான் பாக்கணும். உங்க வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி மறுபடியும் கூப்பிடறேன்". அந்தப் பெண் - ஹலோ, ஹலோவென்று சொல்லச் சொல்ல, தொலைபேசி வைக்கப்படுகிறது.

மொட்டை மாடி மனிதன், தண்ணீர் குடித்தவாறே தன் கைப்பேசியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறான். பத்து நிமிடம் கழித்து - மறுபடி கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.

  • "நீ யாரு? என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியாத எதை சொல்லப் போறே?"

"நான் யாருன்றது முக்கியமில்லே. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம். ஆனா அதுக்கு முன்னாடி கவனமா கேளு. நான் சொல்ற இந்த நாலு பொருட்களை எடுத்து உங்க வீட்டு காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே வைக்கணும். உன்னுடைய கைப்பையிலிருந்து கைக்குட்டை, அலமாரியிலிருந்து உன் சென்ட் - அதாவது நாத்தமருந்து, இன்னிக்கு காலையில் நீ செய்த சாம்பார் மற்றும் உன் புருஷனோட ஒரு பழைய பனியன் - இந்த நாலு பொருட்களையும் வெளியே வெச்சிட்டு வா. அடுத்து 30 நிமிஷம் கழிச்சி மறுபடி கூப்பிடுறேன்."

  • "நீ சொல்றத கேக்கலேன்னா?"

"எனக்கு ஒண்ணும் நஷ்டம் கிடையாது. உன் புருஷனைப் பத்தி ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்னு பாத்தேன். அப்புறம் அந்த ரகசியம் உனக்குத் தெரியாமலேயே போயிடும். பரவாயில்லையான்னு முடிவு பண்ணிக்கோ."

  • டொக்.

"ஹலோ, ஹலோ"

  • -------------------------------

மொட்டை மாடி. இப்போது வேறொரு எண்ணை அழுத்துகிறான்.

  • "ஹலோ"

"உன் வாழ்நாளிலேயே உனக்குப் பிடிச்ச செய்தி ஒண்ணு சொல்றேன். கேட்டுக்க தயாரா இருக்கியா?"

  • "யார் நீ? என்ன செய்தி அது?"

"உடனே உன் வீட்டு ஜன்னலிலிருந்து வெளியே எட்டிப் பார். எதிர் வீட்டிலிருந்து ஒருவர் சில பொருட்களை எடுத்து வந்து வெளியே வைப்பாங்க. அடுத்த பத்து நிமிடங்களுக்கு அப்படியே பாத்திட்டு இரு. நீ ரொம்ப நாளா எதிர்பார்த்தது நடக்கும்."

  • ----------------------------

எழுந்து போய் வெளியே நகரத்தைப் பார்க்கிறான். மொட்டை மாடியிலிருந்து நல்ல வியூ. ஆனால், உச்சி வெயில் மண்டையை பொளக்கவே, மறுபடி வந்து நிழலில் உட்கார்ந்து - படபடவென்று நெட்டி முறித்தவாறே - மதிய உணவுப் பொட்டலத்தை பிரித்து நிதானமாக சாப்பிட ஆரம்பிக்கிறான்.

  • ------------------------------------------

முதலில் பார்த்த பெண் வீடு.

  • "தொலைபேசியிலே பேசினது யாருன்னே தெரிய்லியே. இவரோட பேசலாம்னா ஸ்விச்ட் ஆஃப்னு வருது. எங்கே போய் தொலைஞ்சாரோ தெரியலே. சரி, அவன் சொல்றத கேக்குறத தவிர வேறே வழி தெரியல. அந்த நாலு பொருட்களையும் எடுத்து வெளியில் வெச்சிடுவோம்."

பொருட்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்.

  • ----------------------

இரண்டாவதாக பார்த்த பெண் (எதிர்) வீடு:

  • "ஹலோ.."

"ஆமா. நீங்க சொன்ன மாதிரியே எதிர் வீட்லே அவங்க பொருட்களை எடுத்து வெளியே வெச்சாங்க. அந்த பொருட்கள் கிட்டே வந்த தெரு நாய்கள், வாசனை பார்த்தவுடன், அலறி அடித்து ஓடிடுச்சுங்க. இனிமே அதுங்க இந்த தெருவுக்கே வராதுன்னு நினைக்கிறேன்".

  • டொக்.

  • ------------------

மறுபடி முதல் வீடு:

  • "நான் சொன்ன மாதிரியே செஞ்சதுக்கு நன்றி".

"உனக்கு எப்படி தெரிஞ்சுது."

  • "ஹாஹா.. நடக்கறதை நான் பாத்துக்கிட்டே இருக்கேன்".

"நீ யாருன்னு சொல்லு. நாய்களை ஏன் இந்த தெருவை விட்டு துரத்தினே?"

  • "பொதுமக்களுக்கு பிரச்சினை பண்ணுதுன்னு நகராட்சியே நாய்களை பிடிச்சிட்டு போகுது. நானோ வெறும் துரத்தித்தானே விட்டேன். அவங்க பண்ணா சரி. அதுவே நான் பண்ணால் தப்பா?"

"அது சரிதான். நாய்ங்களால் எங்களுக்கு பிரச்சினைதான். அதுக்கு எதுக்கு எங்க வீட்டை செலக்ட் பண்ணே? நீ யாரு"

  • "கடைத் தெருவுலே, சூப்பர் மார்க்கெட்லே ஜோடியா ஷாப்பிங் பண்ணும்போது புருஷனை பொண்டாட்டி திட்டிக்கிட்டே வருவாங்களே - அவனை மாதிரி நானும் ஒரு அப்பாவி மனுஷந்தான். நாய்களால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்களை துரத்த என்ன வழின்னு யோசிக்கும்போதுதான், இந்த ஐடியா எனக்கு தோணிச்சு. நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வேண்டியதில்லே. இனிமே நீங்க கொஞ்ச நாளைக்கு தெருவுலே பயமில்லாமே நடமாடலாம். சம்பவாமி யுகே யுகே..."

டொக்.

  • -------------

"அப்பாடா. அந்த மூணு பொருட்களால் வீட்லே பயங்கர கப்பு. என்னாலேயே தாங்கவே முடியல. பாவம் அந்த நாய்ங்க என்ன பண்ணும். ஓடியே போயிடுச்சுங்க. ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா. எல்லாம் அவளோட பொருளாவே எடுத்துப் போட்டா, என் மேலே சந்தேகம் வந்துடும்னுதான், என்னோட பனியனையும் எடுத்துப் போடச் சொன்னேன். இனிமே நிம்மதியா வீட்டுலே இருக்கலாம். ஐயய்யோ.. லஞ்ச் அவர் முடிஞ்சிடுச்சே. கீழே மேனேஜர் கத்துவாரே. போய் வேலையை ஆரம்பிக்கணும்".

  • ட்ரிங்.. ட்ரிங்..

"என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்கல்லே. வரும்போது உங்களுக்கு புது பனியன் வாங்கிட்டு வந்துடுங்க. இன்னிக்கு இன்னொரு சமாச்சாரம் நடந்துச்சு. சாயங்காலம் சொல்றேன். வெச்சிரட்டா"

  • டொக்.

மாடியிலிருந்து மெதுவாக கீழிரங்கிப் போக, காமிரா அவர் பின்னால் zoom out ஆகிறது.

  • சுபம்.
(நமது பதிவர் ஒருவர் ட்ரை பண்ணின சொந்த கதை சோக கதை)