மாவோயிஸ்ட்களுடன் புலிகள் இணைவு : இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அறிக்கை
இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கையின்படி, இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும், தென் மற்றும், மத்திய இந்திய காடுகளில், பயிற்சி மற்றும், கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் முகாம்களையும் நடத்தி வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது.
- இந்தத் தகவலை இந்திய எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
- இந்நிலையில், மத்திய புலனாய்வு பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, சண்டிஸ்கார் மற்றும் ஒரிசா, ஆகியஇடங்களில் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அண்மையில், 12 பேரைக்கொண்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் குழு, ஒன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாகவும் மத்தியபுலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
- இந்தத் தகவலை அடுத்து, இந்தியாவின் கரையோரப் பிரதேசங்களின்பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, மாவோயிஸ்ட்வாதிகளின் மக்கள் விடுதலை போராளி இயக்கம், தமிழீழவிடுதலைப்புலிகளின், உதவியைப் பெற்றுக்கொள்வதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன.
- இந்திய படைகளுக்கு எதிராக மாவோ தீவிரவாதிகளை முனைப்புப்படுத்தல்மற்றும், இலங்கைப் படையினரிடம் சந்தித்த தோல்வியைச் சரிசெய்துகொள்வதற்காக, தென்னிந்தியாவில் புதிய தளங்களை அமைப்பதுஎன்பனவே அந்த அனுகூலங்களாகும் என ஆய்வாளர்கள்குறிப்பிட்டுள்ளனர்
No comments:
Post a Comment